Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மூளையை சுறுசுறுப்பாக இயங்க வைக்கும் பாதாம் பேஸ்ட்!! தினம் ஒரு ஸ்பூன் சாப்பிடுங்கள்!!

தினமும் உற்சககத்துடன் செயல்பட்ட மூளையின் செயல்பாடு சுறுசுறுப்பாக இருக்க வேண்டியது அவசியம்.பள்ளி செல்லும் குழந்தைகள்,அலுவலகம் செல்வோர் நாள் முழுவதும் உற்சாகத்துடன் இருக்க ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை தொடர்ந்து உட்கொள்ளும் பொழுது இயற்கையான முறையில் மூளையின் செயல்திறனை மேம்படும்.உலர் விதைகள்,உலர் பழங்கள் போன்றவை மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

குறிப்பாக பாதாம் பருப்பில் இருக்கின்ற ஊட்டச்சத்துக்கள் மூளையை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.

பாதாம் பருப்பில் அடங்கியுள்ள ஊட்டச்சத்துக்கள்:

*கால்சியம்
*புரதம்
*மெக்னீசியம்
*நார்ச்சத்து
*வைட்டமின் ஈ
*ஆன்டி-ஆக்ஸிடன்ட்

பாதாம் பருப்பை அரைத்து பாலில் கலந்து குடித்து வந்தால் மூளையின் செயல்பாடு அதிகரிக்கும்.ஞாபக மறதியால் அவதியடைந்து வருபவர்கள் இந்த பாதாம் பாலை பருகி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

தேவையான பொருட்கள்:

1)பாதாம் பருப்பு – 150 கிராம்
2)தேன் – நான்கு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:

1.முதலில் 150 கிராம் பாதாமை ஒரு கிண்ணத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி எட்டு மணி நேரம் ஊறவிடுங்கள்.

2.பாதாம் நன்கு ஊறி வந்ததும் தண்ணீரை வடித்துவிட்டு பாதாம் பருப்புகளின் தோலை நீக்கி ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.

3.பிறகு இந்த பாதாம் பருப்பில் உள்ள ஈரத்தை துடைத்துவிட்டு வாணலியில் போட்டு வாசனை வரும் வரை வறுத்துக் கொள்ள வேண்டும்.

4.பாதாம் நன்றாக வறுபட்ட பிறகு இதை நன்கு ஆறவைத்துக் கொள்ள வேண்டும்.பின்னர் இதை மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.பாதாம் பவுடரை தொட்டால் மிருதுவாக இருக்க வேண்டும்.இந்த பதத்திற்கு பாதாம் பருப்பை அரைத்து ஒரு கிண்ணத்தில் கொட்டிக் கொள்ள வேண்டும்.

5.பிறகு நான்கு தேக்கரண்டி அளவிற்கு தூயத் தேன் எடுத்து அரைத்து வைத்துள்ள பாதாம் பவுடரில் சேர்த்து நன்கு மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும்.பாதாம் பவுடர் பேஸ்ட்டாக வரும் வரை கலந்து ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டு சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

பயன்படுத்தும் முறை:

பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் பால் சேர்த்து மிதமான தீயில் சூடுபடுத்த வேண்டும்.பால் பச்சை வாடை நீங்கும் வரை காய்ச்சி ஒரு டம்ளருக்கு வடித்துக் கொள்ள வேண்டும்.

அதன் பின்பு தயாரித்து வைத்திருக்கும் பாதாம் பேஸ்ட் ஒரு தேக்கரண்டி அளவு பாலில் சேர்த்து பருகி வந்தால் மூளையில் ஆரோக்கியம் மேம்படும்.

Exit mobile version