Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

உடலுக்கு எக்கச்சக்க நன்மைகளை வாரி வழங்கும் ஏழைகளின் பாதாம்!! முழு பலனும் கிடைக்க இப்படி சாப்பிடுங்கள்!!

உலர் விதைகள் நம் ஆரோக்கியத்தை மேம்படுத்துபவையாக உள்ளது.அக்ரூட்,பாதாம்,முந்திரி போன்ற உலர் விதைகளைவிட வேர்க்கடலையில் ஏகப்பட்ட ஆரோக்கிய நன்மைகள் நிறைந்து காணப்படுகிறது.மற்ற உலர் விதைகளை ஒப்பிடுகையில் வேர்க்கடலையின் விலை மலிவு என்பதால் அதை ஏழைகளின் பாதாம் என்று அழைக்கின்றனர்.

வேர்க்கடலை அத்தியாவசிய சத்துக்கள்:

1)புரதம்
2)தயாமின்
3)பாஸ்பரஸ்
4)நார்ச்சத்து
5)மெக்னீசியம்
6)வைட்டமின் பி

வறுத்த வேர்க்கடலை உடலுக்கு அளிக்கும் நன்மைகள்:

தினமும் ஒரு கைப்பிடி வறுத்த வேர்க்கடலை சாப்பிட்டு வந்தால் இதயத்தில் படிந்துள்ள கொழுப்புகள் கரையும்.

நரம்பு சம்மந்தப்பட்ட பாதிப்புகள் குணமாக வறுத்த வேர்க்கடலையை உட்கொள்ளலாம்.வேர்க்கடலையில் உள்ள நார்ச்சத்துக்கள் செரிமானப் பிரச்சனை,மலச்சிக்கல் போன்றவற்றை சரி செய்ய உதவுகிறது.

வேர்க்கடலையில் இருக்கின்ற புரதம் மற்றும் மெக்னீசியம் உள்ளிட்ட சத்துக்கள் உடல் எடையை பராமரிக்க உதவுகிறது.அடிக்கடி பசி எடுக்கிறதா அப்போ ஒரு கைப்பிடி வறுத்த வேர்க்கடலை சாப்பிடுங்கள் பசி அடங்கிவிடும்.

வறுத்த வேர்க்கடலை உடல் தசைகளை வலிமையாக வைத்துக் கொள்ள உதவுகிறது.வேர்க்கடலையில் இருக்கின்ற ஊட்டச்சத்துக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.

தினமும் வேர்க்கடலை சாப்பிட்டு வந்தால் சருமம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகளை தடுக்கலாம்.வளரும் குழந்தைகளுக்கு வேர்க்கடலையை தினமும் கொடுக்க வேண்டும்.காசநோய் வராமல் இருக்க வறுத்த வேர்க்கடலை சாப்பிடலாம்.

வேர்க்கடலை பவுடரை ஆட்டுப்பாலில் கலந்து பருகி வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.வறுத்த வேர்க்கடலை சாப்பிட்டு வந்தால் உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவு குறையும்.

தினமும் காலை நேரத்தில் வேர்க்கடலை சாப்பிட்டு வந்தால் வயிற்றில் தேங்கிய கழிவுகள் முழுமையாக வெளியேறும்.வேர்க்கடலையில் நிறைந்த எதிர்ப்பு பண்புகள் உடல் வீக்கத்தை குறைக்கிறது.மூளை ஆரோக்கியம் மேம்பட வறுத்த வேர்க்கடலையை தினமும் சாப்பிடலாம்.

Exit mobile version