Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பாதாம் பருப்பு Vs ஊறவைத்த பாதாம் பருப்பு.. உண்மையில் உடலுக்கு எது நல்லது தெரியுமா?

உடல் ஆரோக்கியம் அதிகரிக்க உலர் விதைகள் அனைத்தும் மிகவும் நன்மை தரும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.பழங்களில் இருந்து கிடைக்கும் விதைகளை தான் உலர்ந்த நிலையில் எடுத்துக் கொள்கின்றோம்.அதாவது பாதாம் பருப்பு,முந்திரி,வால்நட் போன்ற உலர் விதைகள் உடலுக்கு ஏகப்பட்ட பலன்களை கொடுக்கிறது.

உலர் விதைகளில் பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடுவது பாதாம் பருப்பு தான்.பாதாம் பருப்பில் எக்கச்சக்க மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படுகிறது.

பாதாம் பருப்பு ஊட்டச்சத்துக்கள்:

1)புரதச்சத்து
2)நார்ச்சத்து
3)வைட்டமின்கள்
4)தாதுக்கள்
5)நல்ல கொழுப்பு
6)வைட்டமின் ஈ
7)கால்சியம்
8)தாமிரம்
9)மெக்னீசியம்

பாதாம் பருப்பின் நன்மைகள்:

**தினமும் ஐந்து பாதாம் பருப்பு சாப்பிட்டு வந்தால் இதய ஆரோக்கியம் மேம்படும்.

**இரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்க பாதாம் பருப்பு சாப்பிடலாம்.

**சருமம் சம்மந்தபட்ட பாதிப்புகளுக்கு பாதாம் பருப்பு தீர்வாக இருக்கிறது.உடலில் உள்ள தேவையற்ற நச்சுக் கழிவுகளை வெளியேற்ற பாதாம் பருப்பு உட்கொள்ளலாம்.

**கண் ஆரோக்கியம் மேம்பட கண் பார்வை திறன் அதிகரிக்க பாதாம் பருப்பை சாப்பிடலாம்.

**உடல் எலும்புகள் வலிமை அதிகரிக்க பாதாம் பருப்பு உட்கொள்ளலாம்.பாதாம் பருப்பில் உள்ள கால்சியம் சத்து எலும்பு சார்ந்த பாதிப்புகளை சரி செய்ய உதவுகிறது.

**பாதாம் பருப்பில் உள்ள நல்ல கொழுப்பு உடலுக்கு ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது.

**இளமை தோற்றத்தை தக்க வைத்துக் கொள்ள பாதாம் பருப்பை சாப்பிட்டு வரலாம்.

**பாதாம் பருப்பு சாப்பிட்டு வந்தால் இரத்த அழுத்த பாதிப்பு குணமாகும்.மூளை ஆரோக்கியம் மேம்பட நினைவாற்றல் அதிகரிக்க பாதாம் பருப்பு சாப்பிடலாம்.

**உடல் எடையை கட்டுக்குள் வைத்துக் கொள்ள பாதாம் பருப்பு சாப்பிடலாம்.பாதாமில் உள்ள வைட்டமிப ஈ இருதய நோய் அபாயத்தை குறைக்கிறது.

சிலருக்கு பாதாமை ஊறவைத்து சாப்பிட பிடிக்கும்.சிலருக்கு பாதாம் பருப்பை நறுக்கி தண்ணீரில் ஊறவைத்து சாப்பிட பிடிக்கும்.சிலருக்கு பாதாம் பருப்பை அப்படியே சாப்பிட பிடிக்கும்.இதில் பாதாமை ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும் என்று பலரும் தெரிவிக்கின்றனர்.ஊறவைக்காத பாதாமில் அதிக பைட்டிக் ஆசிட் இருக்கும் என்றும் பாதாமை ஊறவைத்தால் அந்த அமிலம் குறைந்துவிடும் என்றும் பெரும்பாலானோர் நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.ஆனால் உண்மையில் பாதாமை ஊறவைத்து அல்லது ஊறவைக்காமல் என்று எப்படி சாப்பிட்டாலும் ஒரே பலன்கள் தான் கிடைக்கும்.

Exit mobile version