கண் திருஷ்டியை போக்க கற்றாழை இருக்கு..!! ஆனால் வீட்டு வாசல் முன் கற்றாழை வைத்தால் ஆபத்து..!!

0
440

katralai vastu in tamil: நம் எல்லோருக்கும் வீட்டில் தோட்டம் அமைத்து செடி, கொடி, மலர்கள் என அனைத்தும் வைத்து வளக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஒரு சிலர் வீட்டில் தோட்டம் அமைக்க இடம் இல்லை என்றால் அவர்கள் இருக்கும் இடத்தில் தொட்டிகளில் பூக்கள்,செடிகள், வைத்து வளர்ப்பார்கள். அந்த வகையில் ஒரு சில செடிகளை நாம் அழகிற்காக வளர்ப்போம் ஒரு சில செடிகளை மருத்தவத்திற்காகவும் வளர்ப்போம். இன்னும் சில செடிகள் ஆன்மீக ரீதியாக வளர்த்து வருவோம். அந்த வகையில் நாம் ஆன்மீக ரீதியாகவும், மருத்துவ ரீதியாகவும் வளர்க்கும் செடிகளில் முக்கியமானவை தான் கற்றாழை செடி.

கற்றாழை மருத்துவக் குணம் கொண்டதாக இருந்தாலும், இதனை நம் முன்னோர்கள் வாஸ்து செடியாகவும் வளர்த்து வந்துள்ளனர். அந்த வகையில் இந்த கற்றாழை செடியை வீட்டு வாசல் முன் ஏன் வைக்க கூடாது என்றும், கற்றாழை வைத்தால் என்ன பலன் என்றும் பார்க்கலாம்.

கண் திருஷ்டியை போக்கும் கற்றாழை

இன்றளவும் ஒரு சிலர் வீட்டில் கற்றாழையை வேரோடு பறித்து அதனை கயிறு கட்டி தலைகீழாக கட்டி வீட்டின் வாசல் முன் தொங்க விட்டிருப்பார்கள். இவ்வாறு கற்றாழையை கட்டி தொங்க விட்டால் வீட்டில் உள்ள கண் திருஷ்டி கழியும். இதனை கிழக்கு அல்லது வடக்கு திசையில் கட்டி தொங்கவிட்டால் இதுவரை இருந்து வந்த திருஷ்டிகள் நீங்கும்.

வீட்டின் வாசல் முன் கற்றாழை ஏன் வைக்க கூடாது?

மருத்துக் குணங்கள் கொண்ட கற்றாழையை நாம் வீட்டின் வாசல் முன் வைக்க கூடாது. ஏனெனில் கற்றாழை பொதுவாக காற்றில் உள்ள ஈரப்பதத்தை ஊறிஞ்சிம் தன்மை கொண்டது. அவ்வாறு இருக்கையில் மண்ணில் உள்ள நீரை ஊறிஞ்சி அப்படியே வைத்துக்கொள்ளும். மேலும் கற்றாழை வைத்த இடத்தை குறிப்பிட்ட வெப்பநிலையை அது ஏற்படுத்தி தக்க வைத்துக்கொள்ளும்.

இதனால் அந்த இடத்தில் கற்றாழை புதர் போல் படர்ந்து வளரும். எனவே விஷ சந்துக்கள் வர வாய்ப்புள்ளது. மேலும் கற்றாழையில் முள் இருப்பதாலும், குழந்தைகள் அதனை தொட்டுவிட்டால், அல்லது பூச்சிகளால் பாதிக்கப்படும் என்பதாலும் அதனால் நிம்மதியை இழக்க கூடும் என்பதால் வீட்டில் முன் கற்றாழை வைக்க கூடாது என்று கூறிவார்கள்.

பயன்கள் – katralai benefits in tamil

கற்றாழையின் பயன்களை சாெல்லிக்கொண்டே போகலாம் அந்த அளவிற்கு இதில் நிறைய பலன்கள் உள்ளன. வயிற்று சம்பந்தப்பட்ட நோய்கள் முதல் சரும நோய்கள் வரை அனைத்திற்கும் தீர்வு உண்டு.

ஆனால் இந்த கற்றாழை செடியை நாம் முற்றியதும் தான் பயன்படுத்த வேண்டும். வளர்ந்து வரும் செடியை பயன்படுத்த கூடாது.

மேலும் இந்த செடி நேர்மறை ஆற்றல் கொண்டது போல எதிர்மறை ஆற்றலும் உடையது. எனவே மனக்குழப்பத்தில் உள்ளவர்கள் இந்த செடியை பயன்படுத்த வேண்டாம். அது மேலும் எதிர்மறை ஆற்றலை கொடுக்கும்.

மேலும் படிக்க:நிம்மதி இல்லையா? உங்கள் வீட்டில் இந்த பொருள் இருந்தால் உடனே தூக்கி எறிங்க..!!