Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தனியாக அதுவும் சொந்தமாக தியேட்டர் திறந்துள்ள பிரபல நடிகர்! எவ்ளோ பெருசு தெரியுமா?

Alone is the famous actor who has opened his own theater! Do you know anyone proud?

Alone is the famous actor who has opened his own theater! Do you know anyone proud?

தனியாக அதுவும் சொந்தமாக தியேட்டர் திறந்துள்ள பிரபல நடிகர்! எவ்ளோ பெருசு தெரியுமா?

நடிகர் நடிகைகள் படங்களில் நடிப்பதோடு மட்டும் நிறுத்திக் கொள்ளாமல், அதற்கடுத்து அவர்களுக்கு தேவையான வருமானம் வருமளவுக்கு, அவர்கள் சொந்தமாக ஒரு தொழிலையும் ஆரம்பித்து விடுகின்றனர். ஏனென்றால் நடிகர், நடிகைகளின் தொழில் ஒரு நிரந்தரமான தொழில் அல்ல. அவர்கள் நன்றாக இருக்கும் வரை தான் பணம் சம்பாதிக்க முடியும்.

அதன் காரணமாக ஒவ்வொருவரும் ஒவ்வொரு தொழில் செய்வது வழக்கம் தான். ரியல் எஸ்டேட்டில் சிலர் உள்ளனர். நட்சத்திர ஓட்டல், உணவகங்கள் போன்றவற்றிலும் கவனம் செலுத்தி செய்து வருகிறார்கள். நகை வியாபாரம், உடற்பயிற்சி கூடங்கள் போன்றவற்றைக் கூட சிலர் செய்கின்றனர். அந்த வரிசையில் தற்போது நடிகர் விஜய் தேவரகொண்டா ஒரு தியேட்டரை சொந்தமாக கட்டியுள்ளார்.

இவர் தமிழில் நோட்டா படத்தில் நடித்து பிரபலமானார். தெலுங்கில் இவர் நடித்த அர்ஜுன் ரெட்டி படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அதன் மூலம் முன்னணி கதாநாயகனாக உயர்ந்தார். அதே போல் இவர் நடித்த டியர் காம்ரேட் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளிலும் வெளியானது. மிகக் குறுகிய காலத்திலேயே முன்னணி கதாநாயகனாக உலா வரத் தொடங்கினார்.

எனவே அவரது சம்பளத்தையும் தற்போது உயர்த்தியுள்ளார். இந்த நிலையில் தற்போது அவர் ஹைதராபாத்தில் உள்ள மகபூப் நகரில் சொந்தமாக தியேட்டர் ஒன்றை கட்டியுள்ளார். இதற்கு  பல கோடிகள் செலவு செய்து அனைத்து வசதிகளுடனும் இந்த தியேட்டரை மிக பிரமாண்டமாக உருவாகியுள்ளார். தற்போது அந்த புதிய தியேட்டரில் லவ் ஸ்டோரி என்ற தெலுங்கு படம் திரையிடப்படுகிறது. இந்த படத்தில் கதாநாயகனாக நாகசைதன்யா மற்றும் கதாநாயகியாக சாய்பல்லவி ஜோடியாக நடித்துள்ளனர்.

Exit mobile version