கடந்த 2015ஆம் ஆண்டு அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நிவின் பாலி, சாய் பல்லவி, மடோனா செபாஸ்டின் மற்றும் அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்டோர் நடித்து வெளியான பிரேமம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
மலையாள திரைப்படமாக இருந்தாலும் கூட சென்னையில் இந்த திரைப்படம் ஒரு வருடத்திற்கு மேல் ஓடி சாதனை படைத்ததாக சொல்கிறார்கள். தென்னிந்திய சினிமாவில் ஒரு புதிய வைரலாக இந்த திரைப்படம் அமைந்துவிட்டது. முக்கியமாக மலர் டீச்சர் என்று சாய் பல்லவி அழைக்கப்பட்டது, அதோடு மலர் டீச்சர் தான் என்னுடைய கிரஸ் என பலரும் தெரிவிக்க காரணம் மலர் டீச்சர் கதாபாத்திரம்தான் என்று தெரிவிக்கப்படுகிறது.
தற்சமயம் அல்போன்ஸ் புத்திரன் சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமாக இருக்கின்றார். ரசிகர்களுடைய கேள்விக்கு தொடர்ச்சியாக பதில் அளித்து வருகின்ற அவர் ஒரு சில தினங்களுக்கு முன்னர் ரஜினிகாந்த் அவர்களுக்காக தான் ஒரு கதை வைத்திருப்பதாகவும், ஆனால் அவரை சந்திப்பதற்கான வாய்ப்பு கிட்டவில்லை என்றும் தெரிவித்திருக்கிறார்.
தற்சமயம் பிரேமம் திரைப்படத்தில் வேறு ஒரு நடிகையை நடிக்க வைப்பதற்கான எண்ணமானது தங்களுடைய மனதில் இருந்ததா என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.
அதற்கு பதில் அளித்த இயக்குனர் தொடக்க காலத்தில் இந்த கதையை எழுதிய போது நான் நடிகை அசினை தான் மலர் டீச்சராக நடிக்க வைக்க விருப்பம் கொண்டேன் கொச்சியை சார்ந்தவராக நடிகை இருந்தது ஆனாலும் அந்த சமயத்தில் என்னால் அசினை தொடர்பு கொள்ள இயலவில்லை. என்று தெரிவித்திருக்கிறார்.
அவரை தொடர்பு கொள்வதற்கு நடிகர் நிவின் பாலி யும் முயற்சி செய்தார். அதன்பிறகு அசின் முடிவை கைவிட்டு விட்டு தமிழில் கதையை எழுதினேன் நான் சிறுவயதில் ஊட்டியில் நடித்தேன் அதன் பிறகு என்னுடைய திரைப்பட படிப்பை சென்னையில் படித்தேன் என்றும் தெரிவித்திருக்கிறார். இதனால்தான் வலுவான தமிழ் இணைப்பு என்னுள் இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார்.