Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

FZS பைக்கை அசால்டாக ஓட்டும் ஆலியா மானசா!

ராஜா ராணி என்ற தொடரின் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தவர் தான் ஆல்யா மானசா. ஏற்கனவே கலைஞர் டிவியில் ஒளிபரப்பான மானாட மயிலாட நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்.

ஆனால் விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீசன் 1 மிகவும் பிரபலமடைந்தது. அதில் தனக்கு ஜோடியாக நடித்த நடிகர் சஞ்சீவ்யே காதலித்து திருமணம் செய்து கொண்டார்.இவர்களுக்கு சமீபத்தில் ஒரு பெண் குழந்தையும் பிறந்துள்ளது.

கணவன் மனைவி இரண்டுமே சோஷியல் மீடியாக்களில் மிகவும் ஆக்டிவாக இருப்பார். அவ்வப்போது பிறந்தநாள் வீடியோக்களை வெளியிட்டு மற்றும் யூட்யூபில் பல வீடியோக்களை வெளியிட்டு நம்பர் ஒன் டிரெண்டிங்கில் வருவர்.

இப்பொழுது ராஜா ராணி சீசன் 2 என்ற தொடரில் விஜய் டிவியில் கதாநாயகியாக நடித்து வருகிறார். தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் 3.4 மில்லியன் பாலோரேஸ் வைத்துள்ளார் ஆல்யா மானசா.

எப்பொழுதும் தாம் என்ன செய்கிறோம் என்பதை தனது இன்ஸ்டா மற்றும் ட்விட்டர் பக்கங்களில் வெளியிட்டுவரும் ஆலியா மானசா மற்றும் சஞ்சீவ், இந்நிலையில் ஆலியா மானசா பைக் ஓட்டும் வீடியோ ஒன்றை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர்.

அதில் FZS பைக்கை தனி ஒருவராக அசால்டாக ஓட்டும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இதை பார்த்த ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

அந்த வீடியோவை வெளியிட்டு அதில்,உங்கள் ஆற்றல் முழுவதையும் பழையதை எதிர்த்து போராடுவதில் இல்லாமல் புதியதை உருவாக்குவதில் கவனம் செலுத்துங்கள் என்ற கேப்ஷனயும் பதிவிட்டுள்ளார்.

https://www.instagram.com/p/CP7n-zEF3SB/?utm_source=ig_web_copy_link

Exit mobile version