Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

உன்னை பார்த்து வியக்கிறேன்!!  கழிவுநிரை சுத்தப்படுத்திய  5 வயது சிறுவன்!!

Amazed at you!! A 5-year-old boy cleaned sewage!!

Amazed at you!! A 5-year-old boy cleaned sewage!!

உன்னை பார்த்து வியக்கிறேன்!!  கழிவுநிரை சுத்தப்படுத்திய  5 வயது சிறுவன்!!

கழிவுநீர் கால்வாயை சுத்தம் செய்த ஐந்து வயது சிறுவனுக்கு பாரட்டுக்கள் எண்ணற்ற அளவில் குவிந்து வருகிறது. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் உள்ள ‘கழிவு நீர் கால்வாயை தூய்மை பணியாளர்கள் சுத்தம் செய்வதில்லை’ என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த அப்துல்லா என்ற சிறுவன் கழிவுநீர் கால்வாயை சுத்தம் செய்துருக்கிறான். சமூக வலைதளங்களில் வைரலகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாணியம்பாடி அடுத்த செட்டியப்பனூர் ஊராட்சி கரிமாபாத் பகுதியில் ஊராட்சி சார்பில் கழிவு நீர் கால்வாய்களை சுத்தம் செய்வதில்லை என்றும், தினமும் வீடு வீடாக சென்று கழிவு, குப்பைகளை, சேகரிக்கும் பணிக்கான ஊழியர்களும் அப்பகுதிக்கு வருவதில்லை’ என்றும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

இதனிடையே ஆறு மாத காலமாக அப்பகுதியில் சரிவர அடிப்படை வசதிகள் ஏதுமின்றி உள்ளனர். வார்டு உறுப்பினர்கள், கவின்சிலர், தலைவர்கள் மற்றும் நிர்வாகம் உள்ளிட்டவர்களும் சரியாக பணிகளை செய்வதில்லை. ஆள் பற்றாக்குறை என  ஊராட்சி நிர்வாகம் பல காரணங்களை கூறி வருவதாவும் அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இந்நிலையில் அப்துல் வாகித் மகன் அப்துல்லா என்ற சிறுவன் ‘’கழிவுநீர் கால்வாயில் நீர் தேங்கி உள்ளதை கண்டு தானாக முன்வந்து தூய்மை செய்யும் பணியில் ஈடுபட்டான்.

சிறுவனின் செயல் அனைவருக்கும் வியப்புகுள்ளாக்கியது. அப்பகுதி சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்கும் எண்ணமும், நோயே நொடியின்றி நலமுடன் வாழ வேண்டும் என்ற குணமும் வியப்புக்குள்ளாக்கியது.

Exit mobile version