நம் உடல்நலப் பிரச்சனைகளை ஆயுர்வேத மருத்துவம் மூலம் சுலபமாக குணப்படுத்திக் கொள்ளலாம்.
1)தூதுவளை பூ மற்றும் இலையில் கசாயம் செய்து பருகி வந்தால் நினைவாற்றல் பெருகும்.தொண்டை கரகரப்பு நீங்க தூதுவளை இலையை அரைத்து தேன் கலந்து சாப்பிடலாம்.
2)ஆவாரம் பூவில் டீ செய்து பருகி வந்தால் சருமம் தொடர்பான பிரச்சனைகள் அனைத்தும் நீங்கிவிடும்.ஆவாரம் பூவை அரைத்து சாப்பிட்டு வந்தால் பெண்களுக்கு வெள்ளைப்படுதல் பிரச்சனை குறையும்.
3)இஞ்சி துண்டை ஒரு கிளாஸ் நீரில் கொதிக்க வைத்து வடித்து தேன் கலந்து குடித்து வந்தால் வறட்டு இருமல் குணமாகும்.
4)கருணைக்கிழங்கை உணவாக எடுத்துக் கொண்டால் இதயம் தொடர்பான பாதிப்புகள் சரியாகும்.
5)ஏலக்காயை சுட்டு அதன் புகையை சுவாசித்தல் மூக்கடைப்பு பிரச்சனை சரியாகும்.துளசி,கற்பூரம்,ஓமவல்லி இலையை நெருப்பில் போட்டு புகை மூட்டி சுவாசித்தல் மூக்கடைப்பு குணமாகும்.
6)வசம்பு மற்றும் கருப்பு மிளகை பொடித்து தண்ணீரில் குழைத்து சாப்பிட்டால் தொண்டை வலி குணமாகும்.
7)சின்ன வெங்காயத்தை நெருப்பில் சுட்டு சாப்பிட்டால் இருமல் குணமாகும்.பூண்டை நெருப்பில் சுட்டு சாப்பிட்டால் உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவு குறையும்.
8)சீரகத்தை அரைத்து தேன் குழைத்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.
9)எலுமிச்சை பானத்தில் உப்பு கலந்து பருகினால் மலச்சிக்கல் பாதிப்பு சரியாகும்.வெறும் வயிற்றில் விளக்கெண்ணெய் கலந்த தண்ணீர் குடித்தால் மலச்சிக்கல் பிரச்சனை சரியாகும்.
10)வாதநாராயணன் கீரையை அரைத்து சாறு எடுத்து பருகி வந்தால் மூட்டுவலி,கை கால் வலி குணமாகும்.
11)முருங்கை இலையில் அடை செய்து சாப்பிட்டு வந்தால் உடலில் இரும்புச் சத்தின் அளவு அதிகரிக்கும்.உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் முருங்கை கீரையை ஜூஸ் பதத்திற்கு அரைத்து எலுமிச்சை சாறு கலந்து பருகலாம்.