வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் வியக் வைக்கும் நன்மைகள்!!
கோடைக்காலம் என்றால் அதிக நீர் உட்கொள்ளல் மற்றும் பலவகையான பழங்கள். நீரேற்றமாக இருக்க நீங்கள் அதிக தண்ணீர் அல்லது பழங்கள் மற்றும் காய்கறிகள் அதிக நீர்ச்சத்து உள்ளவற்றை உட்கொள்ள வேண்டும்.
அதிக நீச்சத்துக் கொண்ட வெள்ளரியில் வெள்ளரிக்காய், வெள்ளரிப்பிஞ்சு, மற்றும் வெள்ளரிப்பழம் என அனைத்து வடிவங்களிலும் சாப்பிடலாம்.
வெள்ளரிக்காய் நம் கண்களைப் பாதுகாக்கும், மாலைக்கண் நோயை, முதுமை அடைவதால் ஏற்படும் பார்வை குறைபாடுகளைத் தடுக்கும். மேலும் இது புற்றுநோயைத் தடுக்கும், முகப்பரு ஏற்படுவதைக் குறைக்கும்.
தினசரி இரண்டு வெள்ளரிக்காய் எடுத்துக்கொள்ள, இதில் உள்ள நார்ச்சத்துக்கள் மலச்சிக்கலை குணப்படுத்தும். மேலும் குடல் சுத்தமாகும்.
வெள்ளரிக்காய் சாப்பிட சிறுநீரக சம்மந்தப்பட்ட நோய்கள் வராமல் தடுக்கும். சிறுநீர் நன்றாக பிரிய செய்யும் தன்மையும் கொண்டது. கீழ்வாத நோய்கள் வராமல் தடுக்கும் தன்மைக்கொண்டது.
ஆண்மை குறைபாடு உடையவர்கள், வெள்ளரிக்காயை அடிக்கடி உணவில் சேர்ப்பதால் ஆண்மை அதிகரிக்கும்.
தயிரில் இந்த வெள்ளரி விதைகளை எடுத்துகொள்வதன் மூலம் சிறுநீர்க்குழாயில் உள்ள கல்லை கரைக்கவும் இவை உதவும்.
கண்களுக்கு மேலுள்ள கண்ணிமைக்கும் வெள்ளரிக்காய் மசித்து தடவி அல்லது வட்ட வடிவில் நறுக்கி பத்து நிமிடங்கள் வைத்து ஓய்வெடுக்கவும். இவ்வாறு தொடர்பு செய்து வருகையில் கண் கருவளையம் மறைந்து போய்விடும்.
சிறிது சிறிதாக வெட்டப்பட்ட அரை கப் வெள்ளரிக்காயில் 8 கலோரிகள் மட்டுமே உள்ளன. ஆனால் இதில் 1.9 கிராம் கார்போஹைட்ரேட்கள், 0.3 கிராம் புரதச்சத்துகள் அடங்கி உள்ளன. மேலும் இதில் மெக்னீசியம், பொட்டாசியம், வைட்டமின் சி, வைட்டமின் கே மற்றும் மாங்கனீசு ஆகிய சத்துக்களும் நிரம்பியிருக்கின்றன. இதனை பயன்படுத்தி இதில் உள்ள நன்மைகளை பெற்று மகிழ்வோம்.