நெஞ்சு சளியை நிமிடத்தில் கரைத்து வெளியேற்றும் அற்புத பானம் – தயார் செய்வது எப்படி?
சாதாரண சளிக்கும் நெஞ்சு சளிக்கும் அதிக வித்தியாசம் உள்ளது. அதிக சளி, வறட்டு இருமல், தலைபாரம், நெஞ்சு எரிச்சல்,தொண்டை எரிச்சல்,சளி அடர் மஞ்சள் நிறத்தில் காணப்படுதல் போன்றவை நெஞ்சு சளிக்கான பொதுவான அறிகுறிகள் ஆகும். இந்த நெஞ்சு சளி பாதிப்பு நீங்க வீட்டில் உள்ள பொருட்களை வைத்தது விரைவில் குணப்படுத்தி விடலாம்.
தேவையான பொருட்கள்:-
*ஆடாதோடை இலை – 5
*தூயத் தேன் – தேவையான அளவு
செய்முறை:-
ஆடாதோடை இலை 4 அல்லது 5 எடுத்து தண்ணீர் கொண்டு சுத்தம் செய்து கொள்ளவும். பின்னர் அதை சிறு சிறு துண்டுகளாக நறுக்கவும்.
அடுத்து அடுப்பில் ஒரு இட்லி]பாத்திரம் வைத்து அதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும். பின்னர் அதில் இட்லி தட்டு ஒன்றை வைத்து அதன் மேல் நறுக்கி வைத்துள்ள ஆடாதோடை இலைகளை போட்டு சில நிமிடங்கள் வேக விடவும்.
பின்னர் அடுப்பை அணைத்து வேக வைத்துள்ள ஆடாதோடை இலைகளை எடுத்து அதன் சாற்றை ஒரு பவுலுக்கு பிழிந்து கொள்ளவும். அதோடு சிறிதளவு தூயத் தேன் சேர்த்து நன்கு கலக்கி பருகவும். இவ்வாறு செய்யதால் எப்பேர்ப்பட்ட நெஞ்சு சளியும் சில நிமிடத்தில் கரைந்து வெளியேறி விடும்.
மற்றொரு தீர்வு:-
தேவையான பொருட்கள்:-
*இஞ்சி – தேவையான அளவு (தட்டியது)
*கரு மிளகு தூள் – 1 தேக்கரண்டி
*தூயத் தேன் – 1 தேக்கரண்டி
செய்முறை:-
அடுப்பில் ஒரு டீ போடும் பாத்திரம் வைத்து அதில் 1 டம்ளர் தண்ணீர் ஊற்றி கொள்ளவும். பின்னர் அதில் தட்டி வைத்துள்ள இஞ்சி மற்றும் கரு மிளகு துளை சேர்த்து மிதமான தீயில் 5 முதல் 6 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். பின்னர் அடுப்பை அணைத்து கஷாயத்தை ஆறவைத்து ஒரு டம்ளருக்கு வடிகட்டி கொள்ளவும். பிறகு அதில் 1 தேக்கரண்டி தேன் சேர்த்து குடிப்பதன் மூலம் நெஞ்சு சளி பாதிப்பு அகலும்.