Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அசத்தல்…இந்த மாநிலத்தில் மட்டும் பெண்களுக்கு இலவச பேருந்து இயக்கம்?அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!..

அசத்தல்…இந்த மாநிலத்தில் மட்டும் பெண்களுக்கு இலவச பேருந்து இயக்கம்?அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!..

வட இந்திய மாநிலங்களில் சகோதர மற்றும் சகோதரி பாசத்தை சிறப்பிக்கும் வகையில் ராக்கி அல்லது ரக்‌ஷா பந்தன் என்ற தினத்தை மிகக் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். இந்த தினத்தில் சகோதரிகள் தங்கள் சகோதரர்களின் கைகளில் ராக்கி கட்டி விடுவது வழக்கமாகும். அதே போல் சகோதர, சகோதரிகள் தங்களுக்குள் பரிசுப் பொருட்களையும் மற்றும் புத்தாண்டுகளையும் வழங்கி இந்த தினத்தை கொண்டாடுகின்றனர். ஒரே வயிற்றில் பிறந்தால் தான் அண்ணன் தங்கை என்று அர்த்தம் வெவ்வேறு வயிற்றில் பிறந்தாலும் தன் பாசத்திற்காக அண்ணன் தங்கை எனும் மதிப்பு குறையாது.இந்த ஆண்டு வருகின்ற ஆகஸ்ட் மாதம் 11 ஆம் தேதி ரக்‌ஷா பந்தன் கொண்டாடப்படுகிறது.

இதனை முன்னிட்டு ராஜஸ்தான் அரசு சிறப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி ராஜஸ்தான் மாநிலத்தில், ரக்‌ஷா பந்தன் அன்று பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு அரசுப் பேருந்துகளில் இலவசப் பயணம் வழங்கப்படும். என அம்மாநில முதல்-மந்திரி அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் சாலை மார்க்கத்தில் பேருந்துகளில், ஏசி, வால்வோ மற்றும் அகில இந்திய அனுமதி பெற்ற பேருந்துகளை தவிர, மாநில எல்லைகளுக்குள் ஓடும் பேருந்தில் பெண் பயணிகளிடம் கட்டணம் வசூலிக்கப்படாது என்று ராஜஸ்தான் அரசு அறிவித்துள்ளது. அதன்படி ரக்ஷா பந்தன் கோலாகலமாக கொண்டாடும் என்பது குறிப்பிடத்தக்கது

 

Exit mobile version