புற்றுநோய் வருவதை தடுக்கும் அற்புத பழம்!! தெரிந்தால் சாப்பிட மிஸ் பண்ண மாட்டீங்க!!
உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளி வழங்கும் பழங்களில் ஒன்று பப்பாளி. இதில் மஞ்சள் பப்பாளி, சிவப்பு பப்பாளி என்று இரு வகைகள் உள்ளது. பப்பாளியில் அதிகப்படியான வைட்டமின் சி சத்து நிறைந்து இருக்கின்றது. இதை தவிர்த்து வைட்டமின் ஏ, மற்றும் பொட்டாசியம் சத்து அதிகளவு காணப்படுகிறது.
பப்பாளி பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.
பப்பாளி பழம் உடலின் சூட்டை அதிகரிக்கும் என்று நினைத்து பலரும் இதை சாப்பிடுவதை தவிர்த்து வருகின்றனர்.ஆனால் பப்பாளி பழத்தை சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள பல வித பிரச்சனைகள் சரியாகும்.
பப்பாளி பழத்தை அரைத்து ஜூஸாக சாப்பிட்டு வந்தால் உடலில் தேங்கி கிடக்கும் தேவையற்ற கொழுப்பு கரைந்து வெளியேறும்.உயிருக்கு ஆபத்தான புற்றுநோய் செல்கள் உடலில் உருவாவதை தடுக்க உதவுகிறது.
முறையற்ற மாதவிடாய் பிரச்சனைக்கு பப்பாளி ஜூஸ் சிறந்த தீர்வாக இருக்கின்றது.உங்கள் மேனியை பளபளப்பாக வைத்துக் கொள்ள தின்னும் ஒரு கிளாஸ் பப்பாளி சாறு குடித்து வரலாம்.
கருவுற்ற பெண்கள் பப்பாளி பழம் சாப்பிடுவதை முற்றிலும் தவிர்க்கவும். பப்பாளி பழம் அல்லது பப்பாளி சாறு நாள்பட்ட மலச்சிக்கலை சரி செய்ய உதவுகிறது.