சளியை முழுமையாக கரைத்து வெளியேற்றும் அற்புத மூலிகை ரசம் – செய்வது எப்படி?

0
71
#image_title

சளியை முழுமையாக கரைத்து வெளியேற்றும் அற்புத மூலிகை ரசம் – செய்வது எப்படி?

நம்மை எளிதில் பாதித்து விடும் சளி தொல்லையில் இருந்து விடுபட கீழே கொடுக்கப்பட்டுள்ள மூலிகை ரச செய்முறையை பின்பற்றி நல்ல பலனை பெறுங்கள்.சளியை விரட்டுவதில் தூதுவளை சிறந்த மூலிகை.அதோடு சீரகம்,மஞ்சள் தூள் சேர்த்து ரசம் செய்து சாப்பிடுவதால் உடலுக்கு ஏகப்பட்ட நன்மைகள் கிடைக்கும்.

தேவையான பொருட்கள்:-

*தூதுவளை இலை – 10 முதல் 12

*சீரகம் – 1/2 தேக்கரண்டி

*மல்லித்தூள் – 1/2 தேக்கரண்டி

*மஞ்சள் தூள் – 2 சிட்டிகை

*பெருங்காயத்தூள் – 1 சிட்டிகை

*தக்காளி – 2

*புளி – பெரியஎலுமிச்சை பழ அளவு

*உப்பு – தேவையான அளவு

*எண்ணெய் – தேவையான அளவு

*வரமிளகாய் – 4

*பருப்பு தண்ணீர் – 1/4 கப்

*மிளகு – 1 தேக்கரண்டி

*பூண்டு – 6 பற்கள்

*கொத்தமல்லி தழை – சிறிதளவு

செய்முறை:-

1.முதலில் ஒரு பாத்திரம் எடுத்து அதில் புளியை ஊறவைத்து கொள்ளவும்.10 முதல் 15 நிமிடங்கள் கழித்து புளி தோலை நீக்கி விட்டு அதில் தக்காளியை பிழிந்து கொள்ளவும்.

2.அடுப்பில் ஒரு வாணலி வைத்து அதில் வரமிளகாய்,மிளகு மற்றும் பூண்டு சேர்த்து வாசனை வரும் வரை வறுத்து கொள்ளவும்.பின்னர் அதனை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அதோடு தூதுவளை இலைகளை போட்டு நன்கு அரைத்து கொள்ளவும்.

3.அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி அவை சூடேறியதும் அரைத்த விழுது,பெருங்காயத்தூள்,மல்லித்தூள் மற்றும் மஞ்சள் ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.

4.பிறகு தயார் செய்து வைத்துள்ள புளி,தக்காளி கரைசலை சேர்க்கவும்.அதனோடு தேவையான அளவு உப்பு மற்றும் பருப்பு தண்ணீர் ஊற்றி மிதமான தீயில் வேக விடவும்.பின்னர் ஒரு கொதி வந்ததும் அடுப்பை அணைத்து வாசனைக்காக சிறிதளவு கொத்தமல்லி இலைகளை சேர்க்கவும்.