Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தமிழக அரசின் அசத்தலான திட்டங்கள்! மகிழ்ச்சியில் அரசு ஊழியர்கள்!!

Amazing projects of the Tamil Nadu government! Government employees are happy!!

Amazing projects of the Tamil Nadu government! Government employees are happy!!

உலகையே வாட்டி வதைத்த கொரோனா கால தடுப்பு பணிகளைப் பாராட்டி தமிழக அரசானது காவல் துறையினருக்கு ரூ.58.50 கோடி நிதியை ஒதுக்கியுள்ளது. இதன்மூலம் ஒவ்வொருவருக்கும் ரூ.5,000 என்ற அடிப்படையில் 1.17 லட்சம் கொரோனா தடுப்பு பணியாற்றிய காவல் துறையினருக்கு உதவித்தொகை வழங்கப்படுவதாக தமழ்நாடு அரசு கூறியுள்ளது.

இதையடுத்து போக்குவரத்து துறையினருக்கும் தமிழக அரசு ஒரு பொன்னான செய்தியைக் கூறியுள்ளது. லட்சக்கணக்கான போக்குவரத்து  ஊழியர்கள் பயன் பெறும் விதமாக ரூ.38 கோடி மதிப்பில் பணப்பலனை தமிழக அரசு விடுவித்துள்ளது.

மேலும் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியானது 9% உயர்த்தப்பட்டுள்ளது. இந்த அகவிலைப்படியை கணக்கீடு செய்ய  ஏஐசிபிஐ குறியீடு இதன் மூலகாரணமாக உள்ளது. அரசு ஊழியர்களுக்கான இந்த அகவிலைப்படி ஆண்டிற்கு இரு முறை உயர்த்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில்  2024 ஆம் ஆண்டிற்கான அகவிலைப்படி கடந்த மாதம் உயர்த்தப்பட்டுள்ளது. இது தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி ஓய்வூதியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு ஏற்கனவே 46 சதவிகிதம் அகவிலைப்படி வழங்கப்பட்டுவரும் நிலையில் தற்போது 50% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

புள்ளிகளின் சராசரியை வைத்து அகவிலைப்படி கணக்கீடு செய்யப்பட்டுவரும் நிலையில் தற்போது அப்புள்ளிகள் வேகமாக உயர்ந்துகொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

ஆதார் எண் இணைத்தல், ஓய்வூதிய ஆவணங்கள் மற்றும் இது தொடர்பான அறிக்கைகள், மருத்துவ காப்பீடு அட்டை பதிவு செய்தல், வாழ்நாள் சான்றிதழ் பெறுதல், வருமான வரி தாக்கல் செய்தல், படிவங்கள் பெறுதல்,இது தொடர்பான படிவங்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ளுதல் போன்ற இணையவழி சேவைகளை மின்வாரிய ஊழியர்கள் பெறுவதற்காக தமிழ்நாடு அரசு கைபேசி செயலி ஒன்றை பயன்படுத்திக் கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளது.

Exit mobile version