குதிகால் வெடிப்பிற்கு அட்டகாசமான தீர்வு!! இந்த எண்ணெய் போதும்.. முதல் முயற்சியிலேயே பலன் கிடைக்கும்!!

0
84
Amazing solution for cracked heels!! This oil is enough.. You will get results in first try!!

குளிர்காலத்தில் கால் பாதங்கள் விரிசல் காண்கிறது.இதனால் அரிப்பு,எரிச்சல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது.குதிகால் வெடிப்பு ஏற்பட்டால் பாத அழகே முற்றிலும் குறைந்துவிடும்.எனவே பாத வெடிப்புகளை மறைய வைப்பதோடு பாதங்களை மிருதுவாக மாற்ற உதவும் வீட்டு வைத்தியங்களை ட்ரை பண்ணுங்க.

தேவையான பொருட்கள்:

1)வேப்ப எண்ணெய் – ஒரு ஸ்பூன்
2)கிளிசரின் – ஒரு ஸ்பூன்

செய்முறை:

வேப்ப எண்ணெய் மற்றும் கிளிசரின் மார்க்கெட்டில் கிடைக்கும்.தங்களுக்கு தேவையான அளவு வாங்கிக் கொள்ளவும்.

இப்பொழுது ஒரு கிண்ணத்தை எடுத்துக் கொள்ளவும்.அதில் ஒரு ஸ்பூன் வேப்ப எண்ணெய் ஊற்றவும்.அதற்கு அடுத்து ஒரு ஸ்பூன் கிளிசரின் ஊற்றி நன்றாக மிக்ஸ் செய்யவும்.

பிறகு வெது வெதுப்பான நீரில் பாதங்களை கழுவி சுத்தம் செய்த பிறகு தயாரித்து வைத்துள்ள கலவையை வெடிப்புகள் மீது அப்ளை செய்யவும்.

இந்த கலவை குதிகால் வெடிப்பில் ஊறி நன்றாக மிக்ஸாக வேண்டும்.பிறகு மீண்டும் வெது வெதுப்பான நீரில் கால்களை கழுவிக் கொள்ளவும்.இப்படி செய்தால் வெடிப்புகள் மறைந்துவிடும்.

தேவையான பொருட்கள்:

1)எலுமிச்சை சாறு – ஒரு ஸ்பூன்
2)அரிசி மாவு – ஒன்றரை ஸ்பூன்

செய்முறை:

கிண்ணம் ஒன்றில் ஒன்றரை ஸ்பூன் அரிசி மாவு சேர்த்துக் கொள்ளவும்.அடுத்து அதில் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்யவும்.

பிறகு இதை குதிகாலில் பூசி நன்றாக ஸ்க்ரப் செய்யவும்.பின்னர் வெது வெதுப்பான நீரில் கால்களை கழுவி வந்தால் வெடிப்புகள் தானாக மறைந்துவிடும்.

தேவையான பொருட்கள்:

1)ரோஸ் வாட்டர் – ஒரு ஸ்பூன்
2)கிளிசரின் – ஒரு ஸ்பூன்

செய்முறை:

கிண்ணத்தில் ரோஸ் வாட்டர் மற்றும் கிளிசரின் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து குதிகால் வெடிப்புகள் மீது தடவவும்.

பிறகு ஒரு ஸ்க்ரப்பர் கொண்டு குதிக்கால் வெடிப்புகளின் மீது ஸ்க்ரப் செய்யவும்.பிறகு இளஞ்சூடான நீரில் கால்களை ஊறவைத்து சுத்தம் செய்ய வேண்டும்.இதை தொடர்ந்து செய்து வந்தால் குதிகால் வெடிப்பு முற்றிலும் மறைந்துவிடும்.