Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கருத்தரிக்க உதவும் அற்புத கீரை!! இதன் அற்புத நன்மைகள் தெரிந்தால் ஆண்கள் இப்போவே வாங்கி சாப்பிடுவீங்க!!

நாம் இயற்கை சூழல் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொண்டால் மட்டுமே உடல் ஆரோக்கியத்துடன் நீண்ட வருடங்கள் வாழமுடியும்.நம் அம்மா,பாட்டி காலத்தில் தினமும் ஒரு கீரை சமைத்து சாப்பிடும் வழக்கம் இருந்தது.இரும்புச்சத்து,போலிக் ஆசிட் என்று நமது உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் கீரைகளில் இருக்கிறது.இருப்பினும் இதன் மகத்துவத்தை உணராத இன்றைய தலைமுறையினர் இதை உணவில் சேர்த்துக் கொள்ள விருப்பம் காட்ட தவறுகின்றனர்.

இன்று அசைவத்தின் மீதான ஈர்ப்பு மக்களிடத்தில் அதிகரித்து காணப்படுகிறது.கோழி,ஆடு,மீன் என்று அனைத்தையும் விரும்பி சாப்பிடுகின்றனர்.ஆனால் இந்த அசைவ உணவுகளைவிட ஒரு கட்டு கீரையில் ஏகப்பட்ட சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.

தினசரி ஏதேனும் ஒரு கீரையை சாப்பிட்டு வந்தாலே உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.பெரும்பாலானோர் முருங்கை,மணத்தக்காளி போன்ற கீரையில் தான் அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது என்று நினைக்கின்றனர்.

ஆனால் உண்மையில் அதிகம் பயன்படுத்தாத அரை கீரை,முளைக்கீரை போன்றவற்றில் எண்ணிலடங்கா ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.இதில் அரை கீரையை குழந்தைகள்,பெரியவர்கள்,பெண்கள் என்று அனைத்து வயதினருக்கும் ஏகப்பட்ட பலன்களை கொடுக்கிறது.

அரை கீரையில் உள்ள ஊட்டச்சத்துக்கள்:-

1)இரும்புச்சத்து
2)பாஸ்பரஸ்
3)கால்சியம்
4)வைட்டமின்கள்

அரை கீரை பயன்கள்:

1.இந்த கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.இந்த கீரை சாப்பிடுவதால் உடலில் நச்சுக் கழிவுகள் உருவாவது தடுக்கப்படும்.

2.இந்த கீரையை பக்குவமாக சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்புண் பாதிப்பு குணமாகும்.குடல் ஆரோக்கியம் மேம்பட இந்த கீரையை உட்கொள்ளலாம்.

3.உடல் பலவீனமாக இருப்பவர்கள் அரை கீரையை உணவாக சமைத்து சாப்பிடலாம்.காய்ச்சல்,சளி பிரச்சனை உள்ளவர்கள் குணமடைந்த பின்னர் உடலுக்கு வலு சேர்க்க அரை கீரை சாப்பிடலாம்.

4.கல்லீரலில் உள்ள நச்சுக் கழிவுகள் அகல அரை கீரை சாறு பருகலாம்.மஞ்சள் காமாலை நோயை குணப்படுத்தும் ஆற்றல் இந்த கீரைக்கு இருக்கிறது.

5.சிறுநீரகப் பாதையில் உள்ள தொற்றுக் கிருமிகள் நீங்க அரை கீரை கஷாயம் செய்து பருகலாம்.

6.கருப்பை சார்ந்த பாதிப்புகள் குணமாகி விரைவில் கருத்தரிக்க அரை கீரையை தினசரி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.ஆண்மை குறைபாடு,குறைந்த விந்து வெளியேற்றம் போன்ற பிரச்சனைகளை அனுபவித்து வருபவர்கள் இந்த கீரையை உட்கொள்ளலாம்.

Exit mobile version