5ஆம் வகுப்பு மாணவன் செய்த அசத்தலான செயல்!..அரிசியை பயன்படுத்தி இந்திய வரைபடம்!..
சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.அதன்படி கோவையில் நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 5ஆம் வகுப்பு மாணவன் ஒருவன் 27 ஆயிரத்து 394 அரிசிகளை கொண்டு இந்திய வரைபடம் செய்து அசத்தியுள்ளார்.கோவை நியூ சித்தாபுதுார் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன்.அவருடைய மனைவி. சிஜி தம்பதியின் மகன் கனிஷ்.
நேஷனல் மாடல் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார்.சிறு வயதிலிருந்தே அவருக்கு ஓவியத்தில் ஆர்வம் அதிகமாக இருந்ததாக அவரி பெற்றோர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் 75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு 27,394 அரிசிகளைப் பயன்படுத்தி தேச வரைபடத்தை வரைந்துள்ளார்.மேலும் இதுகுறித்து மாணவன் கனிஷ் கூறியிருப்பதாவது,இரண்டாம் வகுப்பு படிக்கும்போது ஓவியம் வரைவதில் ஆர்வம் ஏற்பட்டது.
பள்ளி அளவிலான ஓவிய போட்டிகளில் பல்வேறு வெற்றிகளைப் பெற்றுள்ளேன். நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு புதுமையான முறையில் ஓவியம் படைக்க இம்முயற்சியில் இறங்கினேன். மக்களுக்கு சுதந்திரம் அடைந்த ஆண்டு தெரியும்.ஆனால் சுதந்திரம் அடைந்து நடப்பாண்டின் சுதந்திர தினத்தோடு சேர்த்து எத்தனை நாட்கள் என்பது தெரியாது. அந்த வகையில் 27 ஆயிரத்து 394 நாட்களைக் குறிக்கும் வகையில் அதே எண்ணிக்கையிலான அரிசிகளைப் பயன்படுத்தி மூவர்ணங்களைச் சேர்த்து இந்திய வரைபடத்தை உருவாக்கியுள்ளேன்.
இதுபோன்ற வித்தியாசமான ஓவியங்களை வரைவதில் தொடர்ந்து ஆர்வம் காட்டுவேன் என்று தெரிவித்தார்.இந்த வரைபடம் சமூகஊடகங்களில் மிக வேகமாக பரவி வருகிறது.அதுமட்டுமல்லாமல் பல பாராட்டும் சிறுவனுக்கு குவிந்து வருகிறது.