Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தனுஷ் சிவகார்த்திகேயன் படங்களின் உரிமையை வாங்கிய பிரபல ஓடிடி நிறுவனம்!

தனுஷ் சிவகார்த்திகேயன் படங்களின் உரிமையை வாங்கிய பிரபல ஓடிடி நிறுவனம்!

அமேசான் ப்ரைம் நிறுவனம் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களக் கைப்பற்றியுள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன் மடோன் அஸ்வின் இயக்கும் மாவீரன் படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக இயக்குனர் மிஷ்கின் நடிக்க உள்ளார். இந்நிலையில் ஹீரோயின் வேடத்தில் அதிதி ஷங்கர் நடிக்கிறார். தற்போது இந்த படத்தின் ஷூட்டிங் நடந்து வருகிறது. இந்நிலையில் ஷூட்டிங் முடியும் முன்னரே இந்த படத்தின் ஒடிடி உரிமையை அமேசான் ப்ரைம் நிறுவனம் மிகப்பெரிய தொகை கொடுத்து கைப்பற்றியுள்ளதாக சொல்லபடுகிறது.

இதே போல தனுஷின் கேப்டன் மில்லர் படத்தின் ஷூட்டிங் தொடங்கும் முன்னரே அந்த படத்தின் உரிமையையும் ப்ரைம் நிறுவனம் வாங்கியுள்ளது. தனுஷ் நடிக்கும் கேப்டன் மில்லர் படத்தை ராக்கி மற்றும் சாணிக்காயிதம் ஆகிய படங்களின் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்க உள்ளார். வரலாற்று பின்னணியில் உருவாகும் படம் என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது.

படத்தில் பிரியங்கா மோகன், சந்தீப் கிஷன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்க, ஜி வி பிரகாஷ் இசையமைக்கிறார். மதன் கார்க்கி வசனங்களை எழுத ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்கிறார். படம் 1930 களில் நடப்பது போன்ற வரலாற்றுக் கதையாக உருவாக உள்ளது. அடுத்த மாத தொடக்கத்தில் இந்த படத்தின் ஷூட்டிங் தென்காசியில் தொடங்க உள்ளது. இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

Exit mobile version