ஆயிரக்கணக்கில் ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் அமேசான்! அதிர்ந்து போன தொழிலாளர்கள்!

0
235
Amazon will lay off thousands of employees! Shocked workers!

ஆயிரக்கணக்கில் ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் அமேசான்! அதிர்ந்து போன தொழிலாளர்கள்!

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் இருந்து வந்தது. அதன் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டுக்குள்ளேயே இருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். அதனைத் தொடர்ந்து பொருளாதார நிலை மிகவும் மோசம் அடைந்தது. மேலும் உக்கரைன் ரஷ்யா போர், காச்சா எண்ணை விநியோகம் அரசியல் நிலைத்தன்மை உற்பத்தி நுகர்வோர் இடையேயான வேறுபாடு உட்பட பல்வேறு காரணங்களால் வளர்ந்து வந்த நாடுகளும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.

மேலும் கடந்த 2022 ஆம் ஆண்டு கொரோனா பரவல் குறைந்த நிலையில் மீண்டும் மக்கள் அவரவர்களின் பொருளாதாரம் நிலைக்கு திரும்பி வருகின்றனர். இந்நிலையில் 2023 ஆம் ஆண்டில் மூன்றில் ஒரு பங்கு உலக பொருளாதார மந்த நிலை சந்திக்கும் என்று ஐஎம்எப் எனும்  சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜார்ஜிவா இந்த ஆண்டு தொடக்கத்தில் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

மேலும் பல்வேறு பெரும் நிறுவனங்கள் ஐடி நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் எண்ணிக்கையை குறைத்து பணி நீக்கம் அறிவிப்பை வெளியிட்டு வருகின்றது. மேலும் உலக அளவில் அமேசான் நிறுவனத்தில் 15 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றி வரும் நிலையில் கடந்த ஜனவரி மாதம் 18 ஆயிரம் பேர் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.

இரண்டு மாத இடைவெளியில் மேலும் 9 ஆயிரம் பேரை நீக்கம் செய்ய இருப்பதாக அமேசான் தலைமைச் செயல் அதிகாரி அறிவித்துள்ளார். மேலும் பொருளாதார நிலையற்ற சூழலில் இருப்பதால் செலவுகளையும் பணியாளர்களின் எண்ணிக்கையும் ஒழுங்குபடுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இது கடினமான முடிவு என்றாலும் நிறுவனத்தின் வருங்கால நலனை கருதி இந்த முடிவை எடுக்கும் நிலை உருவாகியுள்ளது என கூறினார்.

அமேசான் நிறுவனத்தில் கிளவுட் கம்ப்யூட்டிங் மற்றும் விளம்பர பிரிவில் பணியாற்றுபவர்கள் அதிக அளவில் நீக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் எந்த நாட்டில் ஆள் குறைப்பு  செய்யப்பட உள்ளது என்பது குறித்து அமேசான் தரப்பில் எந்த ஒரு தகவலும் தற்போது வரை வெளியிடப்படவில்லை.