Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அமேசான் நிறுவனத்தின் புதிய ஆஃபர்! ஸ்மார்ட் டிவி வாங்க சரியான நேரம்! மிஸ் பண்ணிடாதீங்க! 

Amazon's new offer! The right time to buy a smart TV! Don't miss it!

Amazon's new offer! The right time to buy a smart TV! Don't miss it!

அமேசான் நிறுவனத்தின் புதிய ஆஃபர்! ஸ்மார்ட் டிவி வாங்க சரியான நேரம்! மிஸ் பண்ணிடாதீங்க!
ஆன்லைன் நிறுவனங்களில் ஒன்றான அமேசான் தற்பொழுது பிரைம் வாடிக்கையாளர்களுக்காக அமேசான் கிரேட் ப்ரீடம் பெஸ்டிவல் சேல் விற்பனையை துவங்கியுள்ள நிலையில் ஸ்மார்ட் டிவி வாங்க வேண்டும் என்று நினைக்கும் அனைவருக்கும் இது சரியான நேரமாக கருதப்படுகின்றது. மேலும் அமேசான் நிறுவனம் இந்த விற்பனையில் ஸ்மார்ட் டிவிகளுக்கு 65 சதவீதம் வரை தள்ளுபடி வழங்குகின்றது.
சுதந்திர தினத்தை முன்னிட்டு அமேசான் நிறுவனம் அமேசான் கிரேட் ப்ரீடம் பெஸ்டிவல் சேல் விற்பனையை முதலில் தன்னுடைய பிரைம் வாடிக்கையாளர்களுக்கு தந்துள்ளது. மேலும் பொதுவான வாடிக்கையாளர்களுக்கு இன்று(ஆகஸ்ட்6) மதியம் 12 மணிமுதல் தொடங்கப்படவுள்ளது.
இந்த சுதந்திர தினத்தின் சிறப்பு விற்பனையில் அமேசான் நிறுவனம் பல உலகப் புகழ் பெற்ற நிறுவனங்களின் ஸ்மார்ட் டிவிகளை கூட தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படவுள்ளது. அதில் டாப் 5 ஸ்மார்ட் டிவிகளின் விற்பனை விலை பற்றி காண்போம்.
சோனி பிராவியா: சோனி நிறுவனத்தின் 65 இன்ச் அளவு கொண்ட சோனி பிராவியா 65 இன்ச் 2 4கே அல்ட்ரா ஹெச்.டி ஸ்மார்ட் எல்.இ.டி கூகுள் டிவியின் உண்மையான விலை 139900 ரூபாய் ஆகும். அமேசான் கிரேட் ப்ரீடம் பெஸ்டிவல் சேல் விற்பனையில் இந்த 65 இன்ச் கொண்ட ஸ்மார்ட் டிவி 82990 ரூபாய்க்கு கிடைக்கின்றது.
சோனி பிராவியா: 55 இன்ச் கொண்ட சனி பிராவியா 55 அல்ட்ரா ஹெச்.டி ஸ்மார்ட் கூகுள் டிவியின் உண்மையான விலை 99900 ரூபாய் ஆகும். அமேசான் கிரேட் ப்ரீடம் பெஸ்டிவல் சேல் விற்பனையில் இந்த ஸ்மார்ட் டிவி 57990 ரூபாய்க்கு கிடைக்கின்றது.
சாம்சங்க்: சாம்சங்க் நிறுவனத்தின் 43 இன்ச் அளவு கொண்ட சாம்சங்க் 43 கிரிஸ்டல் 4கே அல்ட்ரா ஹெச்.டி ஸ்மார்ட் எல்.இ.டி டிவியின் உண்மையான விலை 49990 ரூபாய் ஆகும். அதுவே அமேசானின் இந்த சிறப்பு விற்பனையில் இந்த ஸ்மார்ட் டிவி 35990 ரூபாய்க்கு கிடைக்கின்றது.
எல்.ஜி: எல்.ஜி நிறுவனத்தின் 43 இன்ச் அளவு கொண்ட எல்.ஜி 43 இன்ச் 4கே அல்ட்ரா ஹெச்.டி ஸ்மார்ட் எல்.இ.டி டிவியின் உண்மையான விலை 49990 ரூபாய்க்கு விற்பனையான நிலையில் அமேசான் நிறுவனத்தின் சிறப்பு விற்பனையில் இந்த ஸ்மார்ட் டிவி 32990 ரூபாய்க்கு கிடைக்கின்றது.
சியோமி எம்.ஐ: சியோமி எம்.ஐ நிறுவனத்தின் 32 இன்ச் அளவு கொண்ட சியோமி எம்.ஐ 32 இன்ச் ஹெச்.டி ரெடி ஸ்மார்ட் கூகுள் எல்.இ.டி டிவியின் உண்மையான விலை 24999 ரூபாய் ஆகும். அமேசான் நிறுவனத்தின் சிறப்பு விற்பனையில் இந்த ஸ்மார்ட் டிவி 13989 ரூபாய்க்கு கிடைக்கின்றது.
Exit mobile version