அம்பானியின் அடுத்த ஆஃபர்! மிகக்குறைந்த விலைக்கு 5ஜி மொபைல்ஸ்!

0
125

ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் தலைவரும் இந்திய தொழிலதிபருமான முகேஷ் அம்பானி 20 கோடி ஸ்மார்ட்போன்களை மாதம் 50 லட்சம் சப்ளை செய்யும்படி பிரபல இந்திய மொபைல் நிறுவனங்களுக்கு ஆர்டர்களை கொடுத்துள்ளார்.

முகேஷ் அம்பானியின் இந்த செயல் இந்திய நிறுவனங்களை ஊக்குவிக்கும் வண்ணம் அமைந்துள்ளது.மிகவும் மலிவு விலைகளில் மார்க்கெட்டை ஆக்கிரமித்துள்ள சைனா நிறுவனங்களுக்கு இது பெரும் அடியாக இருக்கும் என்று பொருளாதார வல்லுனர்கள் கூறுகின்றனர்.மேலும் துவண்டு போன இந்திய கம்பெனிகளுக்கு இது புத்துயிர் அளிக்கும் வண்ணம் உள்ளது.

ஜியோ வில் கூகுள் ,வாட்ஸ் அப் போன்ற உலகத்திலுள்ள ஹைடெக் அனைவரும் முதலீடு செய்துள்ளனர்.அவர்களுடைய டெக்னாலஜியை பயன்படுத்தி தொழில் சாம்ராஜ்யத்தை எட்டாத உயரத்திற்கு கொண்டு செல்வதுதான் முகேஷ் அம்பானியின் மிகப்பெரிய ஆசையாக தற்போது உள்ளது.

அதற்கான அடுத்த திட்டமாக 3000 ரூபாய் ஜியோ 5ஜி ஆஃபரை அறிமுகம் செய்துள்ளார் முகேஷ் அம்பானி.இந்தியாவில் 40 கோடி இந்தியர்கள் ஜியோ சிம்மை பயன்படுத்துகிறார்களாம்.அதில் பாதிப்பேர் ஸ்மார்ட்போன் வைத்துள்ளனர்.மீதமுள்ளவர்கள் போனை பயன்படுத்த வைப்பதற்காக முகேஷ் அம்பானி எடுத்த மிகப்பெரிய முயற்சிதான் இந்த சூப்பர் டூப்பர் ஆஃபர்.

பள்ளிக்கூட பாடம் முதல் பிரைம் மினிஸ்டர் ஆலோசனை ஆலோசனைக் கூட்டம் வரை தற்போது எல்லாமே ஆன்லைன் என வந்திருச்சு.இந்த சூழ்நிலையை முகேஷ் அம்பானி நல்ல பயன்படுத்திக் கொள்ள நினைக்கிறார் போல.

இவர் கொடுத்த இந்த ஆஃபர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் கிடையாது.வெறும் ரூபாய் 3000 ஜியோ 5ஜி ஸ்மார்ட்போன் வரும் டிசம்பரில் இருந்து சந்தையில் விற்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.