Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அம்பாசமுத்திரம் பல் பிடுங்கப்பட்ட விவகாரம் – தேசிய மனித உரிமை ஆணையத்தில் மேலும் இரண்டு புகார் மனு தாக்கல்

#image_title

அம்பாசமுத்திரம் பல் பிடுங்கப்பட்ட விவகாரம் – தேசிய மனித உரிமை ஆணையத்தில் மேலும் இரண்டு புகார் மனு தாக்கல்

தேசிய மனித உரிமை ஆணையம் புகார் மனுக்களை ஏற்றுக்கொண்டு வழக்கு எண் ஒதுக்கீடு செய்தது.

வி கே புரம் பகுதியைச் சேர்ந்த வேத நாராயணன் என்பவர் பல் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் பாதிக்கப்பட்டது தொடர்பாக சென்னையைச் சேர்ந்த ரவி சந்தோஷ் என்பவர் தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார் மனு தாக்கல்.

அம்பாசமுத்திரம் காவல் உட்கோட்ட பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களில் நடந்த சித்திரவதை தொடர்பாக ஹைதராபாத்தை சேர்ந்த நபர் ஒருவர் மற்றொரு மனு தாக்கல்.

ஏற்கனவே கடந்த 30 ஆம் தேதி கல்கத்தாவை சேர்ந்த ஆசிஸ் கோயில் என்ற வழக்கறிஞர் அம்பாசமுத்திரம் பல் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் பாதிக்கப்பட்ட செல்லப்பா உள்ளிட்டோர் தொடர்பாக மனு அளித்து அந்த வழக்கும் நிலுவையில் உள்ளது.

அம்பாசமுத்திரம் பல் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் இதுவரை மூன்று மனுக்கள் தேசிய மனித உரிமை ஆணையத்தில் தாக்கல் செய்து வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்த விவகாரத்தில் ஏற்கனவே மாநில மனித உரிமை ஆணையமும் தாமாக வழக்கை முன்னெடுத்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.

சார் ஆட்சியர் தலைமையில் தொடர் விசாரணையும் நடந்து வருகிறது.

இதுவரை இந்த விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்ட ஏ எஸ் பி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டு பணியிட நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்,மாவட்ட உளவு பிரிவு ஆய்வாளர் உட்பட நான்கு ஆய்வாளர்கள், தனிப்பிரிவு உதவியாளர் தனிப்பிரிவு காவலர்கள் என பத்திற்கும் மேற்பட்டோர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Exit mobile version