Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மருத்துவமனை வளாகத்தில் நோயாளியுடன் தீப்பற்றி ஆம்புலன்ஸ்..! நோயாளிகள் அதிர்ச்சி!!

அரசு மருத்துவமனை வளாகத்தில் கொரோனா நோயாளியை ஏற்றி வந்த ஆம்புலன்ஸ் ஒன்று தீ பிடித்து எரிந்து நாசமானது.

தென்காசி தலைமை அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அங்கு சிகிச்சை பெற்று வந்த நோயாளிக்கு மேற்சிகிச்சை தேவைப்பட்டதால் அவர்களை நெல்லை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்ல 108 ஆம்புலன்ஸ் அதிகாலை கொரோனா சிகிச்சை மையம் அருகே வந்தது.

நோயாளியை ஏற்றி வாகனம் புறப்படும் போது வண்டியில் இருந்த ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்து ஆம்புலன்ஸ் தீ பிடித்தது. வாகன ஓட்டுனர் துரிதமாக செயல்பட்டு நோயாளியை காப்பாற்றியதால் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது.

தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் மேலும் தீ பரவாமல் அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். அதிகாலை நேரத்தில் அரசு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற இந்த தீ விபத்து சம்பவம் நோயாளிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version