அதிரடி சோதனையில் இறங்கிய லஞ்ச ஒழிப்புத்துறை! முன்னாள் அமைச்சரின் வீட்டில் கிடைத்தது என்ன?

0
156

திமுக ஆட்சி பொறுப்பை ஏற்றுக் கொண்டதில் இருந்து அதிமுகவின் மாஜி மந்திரிகள் மீது பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. உதாரணமாக முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் கே சி வீரமணி மற்றும் தங்கமணி அதோடு வேலுமணி உள்ளிட்ட முக்கிய முன்னாள் அமைச்சர்கள் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடியாக சோதனை செய்தது. இதில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக அவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் ஆளும் தரப்பு சொல்லிக் கொண்டிருக்கிறது.ஆனால் சோதனை செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர்களும் எங்களுடைய தரப்பில் எந்த விதமான ஆதாரமும் கிடைக்கவில்லை. அவர்கள் கேட்ட அனைத்திற்கும் நாங்கள் சரியாக கணக்கு கொடுத்து விட்டோம் எங்கள் மீது எந்த ஒரு வழக்கும் போடப்படாது என பதிலடி கொடுத்து வருகிறார்கள்.

திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்னரே அதிமுக அமைச்சர்கள் மீது 97 பக்கங்கள் கொண்ட ஊழல் புகாரில் ஆளுநரிடம் சமர்ப்பித்தது ஆனால் இது தொடர்பாக ஆளுநர் எந்தவிதமான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. அப்போதே எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின் திமுக ஆட்சி பொறுப்பை ஏற்றுக் கொண்டவுடன் தற்போது இருக்கின்ற அமைச்சர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்திருந்தார். அதன்படி தற்போது செயல்பட்டு வருகிறார் என சொல்லப்படுகிறது.

முன்னாள் அமைச்சர்கள் எம்ஆர் விஜயபாஸ்கர், வேலுமணி போன்றோர் வீடுகளில் முன்பே சோதனை நடத்தப்பட்டு இருந்த நிலையில், இந்த சோதனையில் 34 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் 9 சொகுசு கார்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது.முன்னாள் அமைச்சர் கே சி வீரமணி கடந்த 2016 முதல் 2021 ஆம் ஆண்டு வரையில் தமிழகத்தின் பத்திரப்பதிவு மற்றும் வணிகத் துறை அமைச்சராக இருந்த காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர் மீது புகார் கொடுக்கப்பட்டது. அவருடைய சொத்து மதிப்பு 654 சதவீதம் அதிகரித்திருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை தன்னுடைய முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.

அதனடிப்படையில் நேற்றைய தினம் காலை முதல் அதிரடியாக முன்னாள் அமைச்சருக்கு சொந்தமான பகுதிகளில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை மேற்கொண்டது சென்னையில் சாந்தோம் மற்றும் ரீட் ஹாஸ்டல் வடக்கு சாலையில் இருக்கின்ற அவருடைய வீட்டில் சோதனை நடந்தது. சூளைமேடு கில் நகர் சிவானந்தா சாலையில் இருக்கின்ற இல்லத்திலும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினார்கள். அப்போது அந்த வீடு பூட்டி இருந்ததால் அதற்கு சீல் வைக்கப்பட்டது. அந்த இல்லத்தில் மற்றொருநாள் சோதனை நடைபெறும் என லஞ்ச ஒழிப்பு துறை வட்டாரங்கள் தெரிவித்துச் சென்றனர்.

அதேபோல அண்ணாநகர் சாந்தி காலனி அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் முதல் தளத்தில் இருக்கின்ற முன்னாள் அமைச்சர் வீரமணியின் வீட்டிலும் சோதனை நடந்தது. கொளத்தூர் செண்பகா நகரில் இருக்கின்ற மற்றொரு இல்லத்திலும் சோதனை நடந்தது.திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை காந்தி ரோட்டில் இருக்கின்ற முன்னாள் அமைச்சர் வீரமணியின் இல்லத்தில் நேற்றுக்காலை லஞ்ச ஒழிப்புத்துறை துணை காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் தாஸ் தலைமையில் அதிகாரிகள் சோதனையை தொடங்கினார்கள்.

கிருஷ்ணகிரி சாலையில் இருக்கின்ற அவருக்கு சொந்தமான விடுதிகள் மற்றும் ஏலகிரி மலையில் இருக்கின்ற விடுதி உள்ளிட்ட பகுதிகளிலும் சோதனை நடைபெற்றது நாட்டறம்பள்ளி சாலையில் இருக்கின்ற அவருடைய சகோதரர்கள் கே சி காமராஜ் மற்றும் தேசிய அழகிரி உள்ளிட்டோரின் வீடுகள் போன்ற முன்னாள் அமைச்சருக்கு சொந்தமான மற்றும் ஆதரவாளர்களுக்கு சொந்தமான பகுதிகளில் அதிரடியாக சோதனை நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்து இருக்கின்ற குருவி மலை கிராமத்தில் இருக்கிற முன்னாள் அமைச்சர் வீரமணி என் மாமனார் பழனி மற்றும் சின்ன மாமனார் கார்த்திகேயன் உள்ளிட்டோரின் வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு துறையினர் அதிரடியாக சோதனை நடத்தினார்கள். இதைத்தவிர பெங்களூருவில் இரண்டு பகுதிகள் என்று ஒட்டு மொத்தமாகவே முப்பத்தி ஐந்து இடங்களில் சோதனை நடந்ததாக சொல்லப்படுகிறது.இந்த சோதனையை அடுத்து லஞ்ச ஒழிப்புத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு ஒன்றில் சென்னையில் 6 பகுதிகள் பெங்களூருவில் இரண்டு பகுதிகள் என்று ஒட்டுமொத்தமாக முப்பத்தி ஐந்து பகுதிகளில் சோதனை நடத்தப்பட்டது முன்னாள் அமைச்சர் வீரமணி மற்றும் அவர் பங்குதாரராக இருக்கின்ற நிறுவனங்கள் போன்ற பகுதிகளில் சோதனையில் நடந்தது என தெரிவித்திருக்கிறது லஞ்ச ஒழிப்புத்துறை.

இந்த அதிரடி சோதனையில் 34 லட்சம் ரூபாய் பணம் மற்றும் 1.80 லட்சம் மதிப்பிலான அமெரிக்க டாலர் , கணினி ஹார்டு டிஸ்க், ரோல்ஸ் ராய்ஸ் கார், உட்பட 9 சொகுசு கார்கள் 4 ஆயிரத்து தொள்ளாயிரத்து எண்பத்தி ஏழு கிலோ தங்கம், 47 கிராமம் 7.2 கிலோ வெள்ளி பொருட்கள் வங்கி கணக்கு புத்தகங்கள் சொத்து ஆவணங்கள் உள்ளிட்டவை கண்டறியப்பட்டு வழக்கு தொடர்புடைய ஆவணங்கள் மற்றும் ரொக்கப்பணம் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன சொல்லப்படுகிறது.அதோடு முன்னாள் அமைச்சர் வீரமணியின் இல்ல வளாகத்தில் 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான 275 யூனிட் மணலும் கண்டறியப்பட்டிருக்கிறது. இதனை தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என லஞ்ச ஒழிப்புத் துறை சார்பாக சொல்லப்பட்டுள்ளது.