Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இந்தியாவில் வாகனங்கள் தயாரிப்பு மீதான வரியை குறைக்க சொல்லி மன்றாடும் அமெரிக்க கார் நிறுவனம்!

அமெரிக்காவின் முன்னணி வாகன நிறுவனமான டெஸ்லாயிங்க் இந்திய சந்தையில் வருவதற்கு முன்பாகவே இந்தியாவின் மூன்று வாகன உதிரி பாகங்கள் சப்ளையர்கள் உடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு இருப்பதாக தெரியவந்திருக்கிறது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில் ஜெஸிலா உதிரிபாகங்கள் சப்ளை அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தெரிவித்து உள்ளது.

இதுவே முக்கிய மின்னணு உதிரிபாகங்கள் மற்றும் இயந்திர பாகங்கள் என்று பலவற்றுக்கும் நாடுவதாக தெரியவந்திருக்கிறது. அதிலும் குறிப்பாக பேனர்கள், கண்ணாடிகள், பிரேக்குகள், கியர்கள் மற்றும் பவர் சீட்ஸ் போன்ற பல உதிரி பாகங்களும் சப்லை செய்வதற்கான பேச்சுவார்த்தை நடத்தி இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

முன்னரே டெஸ்லா நிறுவனத்திற்கு சோனா தான் ஸ்டார் லிமிடெட் சந்தர் டெக்னாலஜிஸ் லிமிடெட் மற்றும் பாரத் போர்ச் லிமிடெட் உள்ளிட்ட நிறுவனங்கள் உதிரிபாகங்களை சப்ளை செய்து வருகின்றன இந்த சூழ்நிலையில் சந்தையில் நுழையும் முன்பாகவே அதற்காக டெஸ்லா நிறுவனம் தன்னை தயார்படுத்திக் கொண்டு வருகிறது.

சென்ற வருடம் ஜூலை மாதம் மஸ் டெஸ்லா தன்னுடைய கார்களை இந்தியாவில் இறக்குமதி செய்து விற்பனை செய்ததால் அதன் பின்னரும் உற்பத்தியினை ஆரம்பிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனாலும் வரி குறைப்புக்காக அரசின் உதவியை நாடி இருக்கிறது. இதற்கு தற்சமயம் வரையில் அரசு தரப்பில் எந்தவிதமான சாதகமான பதிலும் வரவில்லை என்று சொல்லப்படுகிறது.

சமீபத்தில் இந்த நிறுவனம் மின்சார வாரியம் மீதான வரியை குறைக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்து இருந்தது. அதோடு இவ்வாறு வருகை குறைப்பதன் மூலமாக இந்தியாவில் மின்சார வாகனம் வணிகம் அதிகமாகும். இதனால் அரசுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கும் என்று டெஸ்லா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

நடப்பு வருடத்தில் இந்தியாவின் தன்னுடைய விற்பனையை தொடங்க இருப்பதாக தெரிவித்திருந்த எலான் மஸ்க் டெஸ்லா நிறுவன கார்களுக்கு வரியை குறைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்த சூழ்நிலையில், அரசு வரியை குறைக்குமாறு இங்கே உற்பத்தியை ஆரம்பிக்கும் என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. ஏனென்றால் அரசு தரப்பில் வரியை குறைக்க இயலாது என்று தெரிவித்து இருந்த சூழ்நிலையில், டெஸ்லாவின் அடுத்த திட்டம் என்ன என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. அதிலும் எதற்காக தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறது என்ற பல கேள்விகளும் பூதாகாரமாக இருக்கிறது.

Exit mobile version