Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இந்தியா வந்தடைந்தார் அமெரிக்க ஜனாதிபதி! பிரதமர் மோடி உற்சாக வரவேற்பு!

இந்தியா வந்தடைந்தார் அமெரிக்க ஜனாதிபதி! பிரதமர் மோடி உற்சாக வரவேற்பு!

இரண்டு நாள் அரசு முறை பயணமாக குஜராத் அகமதாபாத் நகரை வந்தடைந்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். அவரது வருகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

அமெரிக்க அதிபரை வரவேற்க பிரதமர் நரேந்திர மோடி அகமதாபாத் விமான நிலையத்திற்கு வருகை தந்துள்ளார். விமானம் சரியாக 11. 30 மணி அளவில் விமான நிலையத்தை வந்தடைந்தது.

அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தனது மனைவி மெலன்யா டிரம்புடன் மற்றும் மகள் இவான்கா டிரம்ப் இன்று இந்தியா வந்தடைந்தார்.

விமானத்திலிருந்து இறங்கிய டொனால்டு டிரம்ப் மற்றும் அவரது மனைவியை பிரதமர் மோடி வரவேற்றார். அமெரிக்க அதிபர் டிரம்ப் கட்டித்தழுவி வரவேற்றார். அப்போது குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி மற்றும் முக்கிய அதிகாரிகள் அனைவரையும் பிரதமர் மோடி அறிமுகம் செய்து வைத்தார்.

விமான நிலையத்தில் சிவப்பு கம்பள வரவேற்புடன் இசை மற்றும் கலை நிகழ்ச்சிகளுடன் அமெரிக்க அதிபருக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.

Exit mobile version