துருக்கியில் 3000 அடி ஆழமுள்ள பள்ளத்தில் சிக்கிக் கொண்ட அமெரிக்கர்!!! பத்து நாட்களுக்கு பிறகு உயிருடன் மீட்பு!!!

0
97
#image_title

துருக்கியில் 3000 அடி ஆழமுள்ள பள்ளத்தில் சிக்கிக் கொண்ட அமெரிக்கர்!!! பத்து நாட்களுக்கு பிறகு உயிருடன் மீட்பு!!!

துருக்கி நாட்டில் 3000 அடி ஆழமுள்ள குகைக்கு ஆராய்ச்சிக்கு சென்ற அமெரிக்காவை சேர்ந்த குகை ஆராய்ச்சியாளர் மார்க் டிக்கி என்பவர் உடல்நலக் குறைவு ஏற்பட்டு அந்த குகையில் சிக்கி கொண்டார். இதையடுத்து பத்து நாட்களுக்கு பிறகு மீட்புத் துறையினர் ஆராய்ச்சியாளர் மார்க் டிக்கி அவர்களை உயிருடன் பத்திரமாக மீட்டுள்ளனர்.

ஆசிய கண்டத்தின் மேற்கு பகுதியில் துருக்கி நாடு அமைந்துள்ளது. இந்த நாட்டில் டாரஸ் என்ற மலைகளில் மோர்கா குகை உள்ளது. இந்த குகை மிகவும் ஆழமானது. சுமார் 3000 அடி ஆழம் கொண்ட இந்த குகை ஆபத்தானதும் கூட.

இந்நிலையில் மோர்கா குகையின் அமைப்பை வரைபடமாக்குவதற்கு அமெரிக்காவை சேர்ந்த குகை ஆராய்ச்சியாளர் மார்க் டிக்கி மற்றும் சிலர் ஆகஸ்ட் மாத இறுதியில் மோர்கா குகைக்கு சென்றனர். மார்க் டிக்கி அவர்களுடன் குகைக்குள் சென்ற அனைவரும் திரும்பிவிட்டனர். ஆனால் மார்க் டிக்கி அவர்கள் திரும்பவில்லை.

கடந்த செப்டம்பர் 2ம் தேதி மார்க் டிக்கி அவர்களுக்கு கடுமையான வயிற்றுப் போக்கு ஏற்றபட்டுள்ளது. இதனால் நோய்வாய்ப்பட்டு உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட மார்க் டிக்கி குகைக்குள்  சிக்கிக் கொண்டார். இந்நிலையில் 3000 அடி ஆழமுள்ள குகைக்குள் சிக்கிய மார்க் டிக்கியை மீட்கும் பணி கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வந்தது.

குகை ஆராய்ச்சியாளர் மார்க் டிக்கி அவர்களை மீட்கும் பணியில் குரேஷியா, ஹங்கேரி, பல்கேரியா, இத்தாலி, போலந்து, மற்றும் துருக்கி ஆகிய நாடுகளை சேர்ந்த 190 நிபுணர்கள், மருத்துவர்கள் ஆகியோர் ஈடுபட்டனர். இதையடுத்து 10 நாட்களுக்கு பிறகு குகை ஆராய்ச்சியாளர் மார்க் டிக்கி அவர்கள் 3000 அடி ஆழமான குகையில் இருந்து உயிருடன் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.

10 நாட்களாக குகையில் சிக்கிக் கொண்ட மார்க் டிக்கி அவர்கள் மிகவும் பலவீனமாக இருந்தார். அதனால் அவரை ஸ்ட்ரெச்சர் உதவியுடன் மீட்பு படையினர் தூக்கிச் சென்றனர். இதையடுத்து துருக்கி அரசு “குகை ஆராய்ச்சியாளர் மார்க் டிக்கிற்கு மருத்துவமனையில் உயர்தரமான சிகிச்சை அளிக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.