அமெரிக்காவில் இரண்டாம் முறையாக அதிபர் பதவியில் அமர்ந்திருக்கக் கூடிய ட்ரம்பவர்கள் பல்வேறு கட்டுப்பாடுகளை கொண்டு வந்து நாட்டினுடைய நிலையை மாற்றி வருகிறார். அவ்வாறாக அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறி இருக்க கூடிய மற்ற நாட்டுநரை அவர்களுடைய சொந்த நாட்டிற்கு நாடக நடத்தப்பட்டு அனுப்பப்பட்டிருக்கின்றனர்.
இந்தியாவிலும் கூட 100க்கும் மேற்பட்டவர்கள் நாடு கடத்தப்பட்டு அமிர்தசரத்தில் இருக்கக்கூடிய சர்வதேச விமான நிலையத்தில் கொண்டு வந்து விடப்பட்டுள்ளனர். இதிலிருந்து மக்கள் மீள்வதற்குள் அதிபற்றம் அவர்கள் அடுத்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஐடி நிறுவனத்தில் பணிபுரியக்கூடிய பலருக்கும் அமெரிக்கா சென்று பணியாற்ற வேண்டும் என்பது மிகப்பெரிய கனவாக இருந்து வரும் நிலையில், அவர்களுக்கென முக்கிய அறிவிப்பை தற்பொழுது அமெரிக்கா அரசு வெளியிட்டுள்ளது.
H1B விசா குறித்த முக்கிய அறிவிப்பு :-
2026 ஆம் ஆண்டிற்கான ஹெச் ஒன் விசா பெறுவதற்கான பதிவு காலமானது மார்ச் 7 2025 அன்று இரவு 10:30 மணிக்கு தொடங்கி மார்ச் 24 2025 இரவு 10:30 மணி அளவில் முடிவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலத்திற்குள் ஹெச் ஒன் பி விசா பெற நினைப்பவர்கள் தங்களுடைய தரவுகளை ரெஜிஸ்ட்ரேஷனை USCIS என்ற மின்னணு தளத்தின் மூலம் செய்து முடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது .
இதற்கான ரிஜிஸ்ட்ரேஷன் தொகையானது 215 டாலர் எனவும் H1B விசா பெறுபவர்களை லாட்டரி மூலம் தேர்வு செய்யும் முறையானது மார்ச் 24ஆம் தேதிக்கு பிறகு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் அதிக அளவில் இந்தியர்களே இந்த விசாக்கள் மூலம் அமெரிக்க நிறுவனங்களில் ஐடி ஊழியர்களாக பணி புரிகின்றனர் என்ற தகவல் வெளியாகி உள்ளது.