Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வேளாண்துறை பட்ஜெட்! கரும்பு விவசாயிகளுக்கு இனிப்பான செய்தி!

தமிழ்நாட்டின் 2021 மற்றும் இருபத்தி இரண்டாம் வருடத்திற்கான பொது பட்ஜெட் நேற்று காலை 10 மணியளவில் தாக்கல் செய்யப்பட்டது .இதனை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். இந்த நிலையில் தமிழக அரசியல் வரலாற்றில் முதல்முறையாக இன்று வேளாண் துறைக்கு என தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. 273 பக்கங்களைக் கொண்ட விவசாயத்திற்கான தனி பட்ஜெட்டை வேளாண் மாநில அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.

பயிறு வகைகள் சாகுபடி மறுபடியும் ஊக்குவிக்கும் விதமாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் வரப்புகளில் பயிறு வகைகளை ஊடுபயிராக வளர்க்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. பயிர்வகைகள், நுகர்பொருள், வாணிப கழகம் மூலமாக கொள்முதல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்திருக்கிறார் வேளாண்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம்.

பயிறு வகைகளை பொதுவிநியோக முறை மற்றும் மதிய உணவுத் திட்டத்திலும் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், பயிறு வகை மதிய உணவு உற்பத்தி திட்டத்திற்கு 45.7 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. எண்ணெய் வித்துக்கள் திட்டத்திற்காக 25 புள்ளி 13 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது. அத்துடன் கரும்பு உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத் தொகையாக ஒரு டன்னுக்கு 150 வீதம் உயர்த்தி கொடுக்கப்படும் என்று தெரிவித்திருக்கிறார்.

அதே போல தென்னை மர உற்பத்தி அதிகப்படுத்துவதற்காக ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து நிர்வாகம் சிறப்பு திட்டம் ஆரம்பிக்கப்படும். தென்னை மர சாகுபடி அதிகப்படுத்துவதற்காக தரமான தென்னங்கன்றுகள் 17 லட்சம் அளவில் உற்பத்தி செய்யப்பட்டு குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும் என்று தெரிவித்திருக்கிறார். தென்னை மரங்களுக்கு இடையேயான இடைவெளி பயன்படுத்திக் கொள்ள ஏதுவாக பல்லடுக்கு சாகுபடி முறையின் மூலமாக பயிர்கள் சாகுபடி செய்யும் திட்டம் ஆரம்பிக்கப்படும் என்று தெரிவித்திருக்கிறார்.

Exit mobile version