காங்கிரஸ் கட்சிக்கு அமித்ஷா எழுப்பிய அந்த கேள்வி! வாயடைத்துப் போன முக்கிய தலைவர்கள்!

0
120

ஏன் நீங்கள் ஆட்சியில் இருந்த சமயத்தில் நாட்டின் விவசாயிகளுக்கு வருடம் தோறும் 6 ஆயிரம் ரூபாய் கொடுக்கவில்லை என்று காங்கிரஸ் கட்சியை கேள்வி எழுப்பியிருக்கிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இரண்டு தினங்கள் பயணமாக கர்நாடக மாநிலத்திற்கு போயிருந்தார். அவருடைய கடைசி தின பயணமான நேற்றைய தினம் பாகல்கோட் மாவட்டத்தில் இருக்கின்ற ஜவகர்லால் நேரு மருத்துவ கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் மத்திய உள்துறை அமைச்சர் பங்கேற்று பேசினார். அவர் பேசியது என்னவென்றால், பிரதமர் மோடி அரசு விவசாயிகளுடைய நலனுக்காக பணி செய்ய உறுதியாக இருக்கின்றது. இந்த மூன்று வேளாண் சட்டங்களும் விவசாயிகளுடைய வருவாயை பலமடங்காக அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை என்று தெரிவித்தார்.

இப்போது இருக்கும் சூழ்நிலையில், உலகின், மற்றும் நாட்டின், எங்கு வேண்டுமானாலும் தங்களுடைய விளைபொருட்களை விவசாயிகள் விற்பனை செய்து கொள்ளலாம் விவசாயிகளுக்கு ஆதரவாக பேசி வரும் காங்கிரஸ் கட்சியின் தலைவர்களும் ஒரு கேள்வியை எழுப்ப நினைக்கின்றேன். உங்கள் கட்சி ஆட்சியில் இருந்த சமயத்தில் எதற்காக விவசாயிகளுக்கு வருடம் தோறும் ஆறாயிரம் ரூபாய் கொடுக்கவில்லை. பிரதமர் பாசல் பிமா திட்டத்திலோ, அல்லது எத்தனால் கொள்கையிலோ, எதற்காக திருத்தம் மேற்கொள்ள வில்லை. ஏனென்றால் , உங்களுடைய நோக்கம் என்பது மிக தவறானது என்று அவர் பேசி இருக்கின்றார்.

உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்றையதினம் பாகல்கோட் மாவட்டத்திலே கேதர்நாத் சுகர் வருட அக்ரோ புரோடக்ட் நிறுவனத்துடைய எத்தனால் திட்டத்தை ஆரம்பித்து வைத்திருக்கிறார். நேற்றுமுன்தினம் சிவமொக்கா மாவட்டத்தில் அதிவிரைவு படை பிரிவு மையம் கட்டுமானத்திற்கான அடிக்கல்லை அமைச்சர் நாட்டினார்.