அமித்ஷா செயலால் நெகிழ்ந்துபோன பாஜக தொண்டர்!

0
136

தமிழகத்தில் இந்த தேர்தலில் எப்படியாவது கால் பதித்து விட வேண்டும் என்று பாஜக முயற்சி செய்து வருகிறது அதற்கான வேலைகளையும் அந்த கட்சி செய்ய தொடங்கி இருக்கிறது.அதன்படி தமிழகத்தில் என்ன நடக்கிறது என்பதை தேசிய தலைவர்கள் மிக உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள்.

அதோடு தமிழக மக்களின் மனதில் இடம் பிடிக்க வேண்டும் என்பதற்காக பல சுவாரஸ்யமான விஷயங்களையும் தேசிய தலைவர்கள் செய்து வருகிறார்கள்.அதன்படி நேற்று இரவு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பிரதமர் நரேந்திர மோடி சாமி தரிசனம் செய்த சமயத்தில் அவர் தமிழர் பண்பாட்டினை போற்றும் விதமாக வேஷ்டி சட்டையில் வலம் வந்தார் என்பது எல்லோராலும் கவனிக்கப்பட்டு பாராட்டப்பட்டது.

அதோடு கடந்த ஆண்டு சீன அதிபர் ஜின்பிங் இந்தியாவிற்கு வந்த சமயத்தில் அவர் தமிழகத்தில் இருக்கின்ற மாமல்லபுரம் பகுதியில் பிரதமருடன் உரையாடிய சமயத்தில் பிரதமர் நரேந்திர மோடி தமிழ் முறைப்படி வேஷ்டி சட்டையில் இருந்தார் என்பது எல்லோராலும் உற்று நோக்கப்பட்டது.

அதுபோக பிரதமர் நரேந்திர மோடி அவ்வப்போது தமிழில் பேசுவதற்கு முயற்சி செய்வதும் எல்லோராலும் கவனிக்கப்படுகிறது. இந்த நிலையில், விரைவில் பிரதமர் நரேந்திர மோடி தமிழ் கற்க இருப்பதாக ஒரு தகவல் கிடைத்திருக்கிறது. ஒருவேளை அவர் தமிழ் மொழியை கற்றுக் கொண்டால் நிச்சயமாக தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி ஒரு மிகப்பெரிய வளர்ச்சியை அடையும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

இந்த நிலையில், நேற்று இரவு கிருஷ்ணாபுரத்தில் இருக்கின்ற பாஜகவின் தொண்டர் ஒருவருடைய சாலையோர உணவு விடுதி ஒன்றில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இரவு உணவு சாப்பிட்டு இருக்கிறார் என்ற தகவல் கிடைத்திருக்கிறது. இன்னும் ஒரு சில தினங்களில் தமிழகத்தில் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதனால் அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும். தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று கரூரில் தேர்தல் பிரசாரத்தை முடித்துவிட்டு கார் மூலம் திருச்சி விமான நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தார். அந்த சமயத்தில் திருச்சி செல்லும் வழியில் கிருஷ்ணாபுரத்தில் இருக்கின்ற பாஜக தொண்டர் ஒருவரின் சாலையோர உணவகத்தில் அவர் இரவு இரவு உணவை சாப்பிட்டு விட்டு சென்றிருக்கிறார். அவருடன் பாஜக மேலிட பொருப்பாளர் சிடி.ரவியும் உணவு சாப்பிட்டிருக்கிறார். தோசை மிகவும் நன்றாக இருந்ததாக அமித்ஷா அந்த கடைக்காரரை பாராட்டிவிட்டு சென்றிருக்கிறார்.