Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அதிமுகவை உடைக்கும் அமித்ஷா!. செங்கோட்டையனுக்கு பொதுச்செயலாளர் பதவியா?!….

eps

eps

ஜெயலலிதா தலைமையில் இயங்கிய அதிமுக அவரின் மறைவுக்கு பின் ஓ.பன்னீர் செல்வத்திடம் சென்று அதன்பின் சசிகலா கைக்கு போனது. சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்கு சென்றுவிட கூவத்தூர் விடுதியில் சசிகலாவால் முதல்வரானார் எடப்பாடி பழனிச்சாம். அதன்பின் ஓ.பி.எஸ், சசிகலா என எல்லோரையும் கட்சியிலிருந்து தூக்கிவிட்டு ஆட்சி, கட்சி என இரண்டையும் தனது கையில் வைத்துக்கொண்டார் பழனிச்சாமி.

இனி எந்த நிலையிலும் சசிகலா, டிடிவி தினகரன் மற்றும் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோரை கட்சிக்குள் விடக்கூடாது என்பதில் பழனிச்சாமி உறுதியாக இருக்கிறார். ஆனால், திமுகவை வீழ்த்த பாஜகவுடன் எல்லோரும் ஒன்றிணைய வேண்டும் என்பதே அமித்ஷாவின் நோக்கமாக இருக்கிறது. சமீபத்தில் பழனிச்சாமி டெல்லி சென்றபோது அவரிடம் அமித்ஷா இதைத்தான் வலியுறுத்தினார். ஆனால், பழனிச்சாமி பிடிகொடுக்கவில்லை.

eps

எனவே, பழனிச்சாமி தலைமை மீது அதிருப்தியில் இருக்கும் சிலரை வைத்து பழனிச்சாமிக்கு அழுத்தம் கொடுக்க நினைக்கிறார் அமித்ஷா. முதலில் இதை செய்தது செங்கோட்டையன்தான். இதுவரை 2 முறை டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து பேசியிருக்கிறார் செங்கோட்டையன். பழனிச்சாமி ஒத்துவரவில்லை எனில் பழனிச்சாமியை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து தூக்கிவிட்டு செங்கோட்டையனின் கையில் அதிகாரத்தை கொடுத்து அவர் மூலம் பாஜக கூட்டணியை உறுதி செய்யலாம் என்கிற எண்ணமும் அமித்ஷாவுக்கு இருப்பதாக சொல்லப்படுகிறது.

sengottayan

அதிமுக, பாஜக, சசிகலா, டிடிவி, ஓபிஎஸ் போன்ற எல்லோரையும் ஒருங்கிணைத்து கூட்டணி அமைக்க பழனிச்சாமி ஒப்புகொண்டால் அவரின் தலைமையில் அதிமுக தொடர்ந்து செயல்படும். இல்லையெனில் செங்கோட்டையனை வைத்து அதிமுகவை உடைக்கும் முயற்சியில் பாஜக ஈடுபடும் எனவும் அரசியல் விமர்சகர்கள் சொல்கிறார்கள்.

பழனிச்சாமி என்ன முடிவெடுப்பார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Exit mobile version