Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அண்ணாமலை நோக்கத்தை ஓரங்கட்டிய அமித்ஷா!!! கூட்டணி குறித்து பத்திரிக்கையாளர் குபேந்திரன் விளக்கம்…

#image_title

அண்ணாமலை நோக்கத்தை ஓரங்கட்டிய அமித்ஷா!!! கூட்டணி குறித்து பத்திரிக்கையாளர் குபேந்திரன் விளக்கம்…

சென்னை : தமிழ்நாட்டில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்கக்கூடாது என்று சமீபத்தில் அண்ணாமலை பேசியுள்ளார். இது குறித்து மத்திய அமைச்சர் அமித்ஷா விடம் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார்.
ஆனால் அமித்ஷா அதனை பெரிதாக கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை.
சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் பாஜகவுடன் அதிமுக கூட்டணியில் உள்ளது என கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் பாஜக வளர்ச்சி அடைய வேண்டுமென்றால் தேர்தலில் தனித்து போட்டியிட வேண்டும் என அண்ணாமலை பேசியிருந்தார். பாஜக தேசியத் தலைமை அதிமுகவுடன் கூட்டணி அமைத்தால் நான் வகிக்கும் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக கூறினார். இதுகுறித்து டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து பேசியுள்ளார். ஆனால் சமீபத்தில் நடந்த தனியார் நிகழ்ச்சி ஒன்றில் மத்திய உள்த்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டார். அப்போது அமித்ஷா பேசுகையில் தமிழ்நாட்டில் பாஜகவுடன் அதிமுக கூட்டணியில் தான் உள்ளது என்று கூறியிருக்கிறார்.

குபேந்திரன் விளக்கம் :

அண்ணாமலைக்கு அரசியல் அனுபவம் தெரியாது. அவர் ஒரு காவல்துறை அதிகாரி. கட்சியில் உள்ளவர்களை மதிப்பதில்லை.கட்சியில் இருந்து என்ன சாதித்திருக்கிறார். கட்சிக்காக பல ஆண்டுகளாக பணியாற்றிய நபர்களை மதிக்கவில்லை .பலர் கட்சியை விட்டு வெளியேறுகின்றனர். பாஜக வில் உள்ள நிர்மல் குமார் அதிமுக வுடன் இணைந்தார்.

இது சம்பந்தமாக பொன் ராதாக்கிருஷ்ணன் கூட உள்ளரங்கில் கோபத்துடன் பேசியிருக்கிறார் என மூத்த பத்திரிக்கையாளர் குபேந்திரன் கூறினார். பின்னர் குபேந்திரனிடம் செய்தியாளர்கள், அண்ணாமலை டெல்லியில் அமித்ஷாவை சந்தித்து பின்னர் தமிழ்நாடு திரும்பிய போது எடப்பாடியை சந்தித்திருக்கிறார்.

அப்படி என்றால் அண்ணாமலை கருத்துக்களை அமித்ஷா ஏற்க மறுத்து விட்டாரா என்று கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கூறுகையில் அமித்ஷாவை சந்தித்து பேசியது வெறும் மூன்று நிமிடம் தான் என்று எனக்கு தகவல் வந்தது. எனக்கு தெரிந்த வகையில் தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது செய்தியாளரிடம் அமித்ஷா அவர்கள் தமிழ்நாட்டில் பாஜக வலுவின்றி உள்ளது எனவும் இதனால் அதிமுகவுடன் கூட்டணியில் உள்ளது என்று கூறியுள்ளார்.

இதனை அண்ணாமலையிடம் காட்டமாக கூறியிருப்பார் என பதிலளித்துள்ளார்

Exit mobile version