டெல்லி தேர்தல் தோல்விக்கு பாஜக பிரச்சாரகர்கள்தான் காரணம்!அமித்ஷா அதிரடி!
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக படுதோல்வி அடைந்ததற்கு பாஜகவினரின் பேச்சுகளேக் காரணம் என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
டெல்லி சட்டமன்றத்துக்கான தேர்தல் கடந்த பிப்ரவரி 8 ஆம் தேதி நடந்தது. அதையடுத்து வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. இதில் ஆளும் ஆம் ஆத்மி கட்சிக்கும் பாஜகவுக்கும் இடையே கடுமையானப் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் சில இடங்களைப் பெற்று மூன்றாவது இடம் பிடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. காங்கிரஸ் ஆதரவளிக்கும் கட்சிதான் ஆட்சி அமைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அனைத்தையும் பொய்யாக்கும் விதமாக வாக்கு எண்ணிக்கையில் ஆரம்ம முதலே ஆம் ஆத்மி கட்சி முன்னிலை வகித்து வந்தது. சற்று முன்பு வரை ஆம் ஆத்மி 62 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. பாஜக 8 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. காங்கிரஸுக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை. இதையடுத்து டெல்லியின் முதலமைச்சராக மூன்றாவது முறையாக அமித்ஷா பதவியெற்றுக்கொண்டார். மக்களவைத் தேர்தல் தோல்விக்குப் பின் பாஜக அனைத்து மாநிலத் தேர்தல்களிலும் தோல்வி அடைந்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த தோல்வி பாஜகவினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, தோல்விக்கான காரணம் குறித்து ஒரு தொலைக்காட்சி நேர்காணலில் தெரிவித்துள்ளார். அப்போது அவர் ‘ எங்கள் தலைவர்கள் குடியுரிமைத் திருத்த சட்டத்துக்கு எதிராக போராடியவர்களை சுட்டுத் தள்ள வேண்டும் எனப் பேசியது மக்களுக்குப் பிடிக்கவில்லை, மேலும் அரவிந்த் கெஜ்ரிவாலை மக்களிடம் பயங்கரவாதி போல சித்தரித்ததையும் அவர்கள் விரும்பவில்லை.’ எனத் தெரிவித்துள்ளார்.