Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தினகரன்! அய்யயோ என்னாச்சு பதறிப்போன தொண்டர்கள்!

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உடல் நலக்குறைவு காரணமாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று கொள்வதற்காக தஞ்சாவூரின் முகாமிட்டிருக்கிறார். இந்த நிலையில், சாப்பிட்டதில் ஒவ்வாமை ஏற்பட்டதன் காரணமாக, தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகிலிருக்கின்ற மீனாட்சி மருத்துவமனையில் நேற்றிரவே சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாக தெரிகிறது.

அவர் உணவு சாப்பிட்டதில் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்ற நிலையில், மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. அதோடு அவர் இன்றே டிஸ்சார்ஜ் செய்யப்படலாம் எனவும், தகவல் கிடைத்திருக்கிறது.

டிடிவி தினகரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்ற தகவல் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தொண்டர்களிடையே கவலையை ஏற்படுத்தியிருக்கிறது.

Exit mobile version