அம்மா மினி கிளினிக்குகள் மூடல் ! திமுகவின் அதிகார ஆட்டம்!
கொரோனா தொற்றானது வருடம்தோறும் உருமாறி பலவகைகளில் பரவிவருகிறது. அந்த வகையில் தற்பொழுது இரண்டாம் மாலை முடிந்து மக்கள் அன்றாட வாழ்க்கை வாழ ஆரம்பித்தனர். அதற்குள்ளேயே தென்னாப்பிரிக்காவில் கொரோனா தொற்றானது ஒமைக்ரானாக உருமாற்றம் அடைந்து தற்பொழுது அனைத்து நாடுகளிலும் பெருமளவு தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் இந்தியாவில் 1,2 பாதிப்புகள் இருந்த நிலையில் தற்போது ஒமைக்ரான் தொற்றுக்கு ஆயிரக்கணக்கில் பாதிக்கப்படும் நிலைக்கு வந்துள்ளோம்.
தேவையான முன்னேற்பாடு வசதிகளையும் அரசாங்கம் தொடர்ந்து செய்து வருகிறது. இன்று மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் சென்னை வேப்பேரி பகுதியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்பொழுது அவர் கூறியதாவது, இனி ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அவரவர் வீட்டிலேயே தனிமைப் படுத்திக் கொள்ளலாம்.
இரண்டு முறை சோதனை செய்தும் நெகட்டிவ் வந்த பின்பு ஒமைக்ரான் பாதிக்கப்பட்டவர்கள் வெளியே செல்லலாம் என்று கூறினார். சென்னையில் 15 மண்டலங்களில் இந்த கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது.
நாளடைவில் சென்னையில் அதிக அளவு தொற்று பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த மருத்துவ குழுக்கள் அமைத்து ஆலோசனை வழங்கப்படும் என்று கூறினார். கோயம்புத்தூர் போன்ற இதர மாவட்டங்களிலும் தொற்று பரவலை கட்டுப்படுத்த விதிமுறைகளை கடுமையாக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று கூறினார். மேலும் தமிழகம் முழுவதும் உள்ள அம்மா மினி கிளினிக்குகள் மூடப்படும் என்று தெரிவித்தார். இந்த அம்மா மினி கிளினிக்குகள் ஓராண்டு அடிப்படையில் தற்காலிகமாக செயல்படுவதற்கு தொடங்கப்பட்டது.
இந்த அம்மா மினி கிளினிக்குகளில் இன்றுவரை சிகிச்சை அளிக்கப்படவில்லை. அந்த கிளினிக்குகளில் செவிலியர்கள் கூட கிடையாது. அதனால் அந்த அம்மா மினி கிளினிக்குகள் மூடப்படும். மேலும் அந்த அம்மா மினி கிளினிக்கில் பணியாற்றிய 1800 மருத்துவர்களுக்கும் மாற்று பணியிடம் வழங்கப்படும் என்று தெரிவித்தார். அம்மா மினி கிளினிக்குகள் மூடுவதற்கு பின் ஏதேனும் பழிவாங்கும் நோக்கம் இருக்கலாம் என்றும் அரசியல் சுற்று வட்டாரங்கள் கூறிவருகின்றனர்.
தற்பொழுது தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் இந்த கிளினிக்குகள் மூடப்படாமல் அதனை பராமரித்து சரிவர திட்டமிட்டு மக்களின் நலனுக்காக பயன்படுத்தலாம் என்றும் கூறுகின்றனர். இவ்வாறு இருக்கும் நிலையில் அம்மா மினி கிளினிக்குகள் மூடுவது ஏன் என பலர் கேள்வி எழுப்புகின்றனர்.