‘பச்சை நிறமே பச்சை நிறமே’ அம்மன் சாரதாவை பாருங்க!! என்ன அழகு..மோனா கிளைமேக்ஸ் மாதிரி இருக்கு!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர்தான் பாக்யலட்சுமி. மேலும் ஒரு குடும்பத்தலைவி கதையை மையமாகக் கொண்டு இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இதன் காரணமாக இந்த தொடருக்கு குடும்ப பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருக்கிறது.
இந்த தொடரில் உள்ள முக்கிய கதாபாத்திரமான பாக்கியலட்சுமி தான் சுசித்ரா. மேலும் அவரது கணவராக கோபி என்ற கேரக்டரில் நடிகர் சதீஷ் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து பாக்கியலட்சுமி தொடரில் ராதிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் நந்திதா ஜெனிஃபர்.
இவர் பாக்கியலட்சுமிக்கு தோழியாகவும், அவரது கணவரின் முன்னாள் காதலியாகவும், நெருக்கமான கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார். மேலும், ஜெனிபர் கலர்ஸ் தமிழில் அம்மன் என்ற தொடரிலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜெனிபர் பாக்கியலட்சுமி தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்து இருந்தார்.
அதற்கு காரணம் பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா கதாபாத்திரம் நெகட்டிவாக மாறப்போகிறது என்று அவர் கூறியிருந்தார். அது மட்டுமல்லால் அவருக்கு ஒரு மகன் இருக்கும், இந்த நிலையில் தற்போது அவர் கர்ப்பமாக இருப்பதாக தகவல் வெளிவந்து உள்ளது. அவர் கற்பகாலத்தில் பச்சை நிற உடையினை போடு கொண்டு மிக அழகாக இருக்கிறார். இதனைக்கண்ட ரசிகர்கள் பச்சை நிறமே என பாடி வருகின்றனர்.