Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அம்மான்னா சும்மா இல்லடா! இணையத்தில் வைரலாகி வரும் குதிரை குட்டியின் தாய் பாசம்!

அம்மான்னா சும்மா இல்லடா! இணையத்தில் வைரலாகி வரும் குதிரை குட்டியின் தாய் பாசம்!

குழந்தை மற்றும் தாய்க்கு உண்டான பாசமானது மனிதர்கள் மட்டுமின்றி அனைத்து உயிர்களும் நன்றாக அறிந்ததே. தாயின் அன்பிற்கு இவ்வுலகில் எதுவும் ஈடாகாது. நமது மனிதர்களுக்கு எப்படி தாயின் மேல் பாச உணர்வு உள்ளதோ அதே போல்தான் ஐந்தறிவு ஜீவன்களுக்கும். நம்மால் ஒரு செயலை அறிந்து அதனை பேச முடியும், ஆனால் அந்த ஜீவன்களின் அன்பு முழுவதும் உணர்வுபூர்வமானது மட்டுமே. அந்த வகையில் கோவையில், பேரூர் அருகே பேருந்து ஒன்றில் குதிரை படம் ஒன்று ஒட்டப்பட்டுள்ளது.

சாலையில் நின்று கொண்டிருந்த குதிரை குட்டி ,அந்த பேருந்தில் ஒட்டப்பட்டிருந்த படத்தைப் பலபார்த்ததும் தனது தாய் தான் என்று எண்ணி அந்த பேருந்து உடனே ஓட ஆரம்பித்துள்ளது. சிறிது தூரம் சென்ற பிறகுதான் அதற்கு தெரிந்தது அது வெறும் படம் என்று.அந்த சாலையில் நின்று கொண்டிருந்த மக்கள் அனைவரும் குதிரையின் செயலைக் கண்டு வியப்படைந்தனர். தன் தாய் தான் என்று நினைத்து,பாசத்தில் அந்த குதிரை குட்டி பேருந்தில் ஒட்டப்பட்டிருந்த படத்தைப் பார்த்து ஓடிய காட்சி தற்பொழுது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

Exit mobile version