அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை சார்ந்த ஒரு பெண்மணி அந்த கட்சியை சார்ந்தவர்களையே கடன் வாங்கி தருவதாக ஏமாற்றி இருப்பதாக சொல்கிறார்கள்.
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகில் இருக்கின்ற, குன்னத்தூர் பகுதியை சார்ந்தவர் ரமணி இவர் அமமுக கட்சியில் பொறுப்பாளராக இருந்து வருகின்றார். எனவே அப்பதவியை பயன்படுத்தி, அந்தப் பகுதி ஏழைப் பெண்களை ஏமாற்றி இருக்கின்றார்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தான் வேலை பார்ப்பதாகவும், கட்சியின் மூலமாக மாவட்ட ஆட்சியர் உத்தரவுபடி கடன் தருவதாவும் பலர் புகார் தெரிவித்தார்கள்.
இதனை அடுத்து, அந்த பணம் உங்களுக்கு கிடைக்கும் ஆனால் உங்களின் நிலை மாறிவிடும் என்று லாவகமாக பேசி பல லட்ச ரூபாய் பணத்தை ஏமாற்றி இருக்கின்றார், கடன் வேண்டுமென்றால், ஒவ்வொரு நபரும் மூவாயிரம் ரூபாய் கட்ட வேண்டும் என்று தெரிவித்து, பணத்தை பெற்றுக் கொண்ட பின்பு நீங்கள் பணத்தை கொடுத்த மூன்றாவது நாள் உங்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் லோன் பணம் கிடைக்கும் என்று தெரிவிப்பாராம்.
அதன் பின்னர் பணம் தந்தவர்களிடம் உங்களுக்கு எடுத்துவரப்பட்ட பணத்தை லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர், மற்றும் புதுக்கடை காவல் நிலைய ஆய்வாளர் உள்ளிட்டோர் வாங்கி வைத்துக் கொண்டனர் என்று தெரிவித்து விடுவாராம்.
அதோடு அவர்களுக்கு உடனே கொஞ்சம் பணம் கொடுத்தால் அந்த பணத்தை திருப்பி தந்து விடுவார்கள். எனவும் அப்பணம் கிடைத்தவுடன் தங்களுக்கு கொடுக்க வேண்டிய பணத்துடன் இதையும் சேர்த்து கொடுத்து விடுகிறேன். என்று தெரிவித்து பல லட்ச ரூபாய்களை வாங்கிக் கொண்டு சென்று விடுவார் என்று தெரிவிக்கிறார்கள்.
மூன்று வருடங்களாக இதே வழியில் பல குடும்பங்களை மோசடி செய்து இருப்பது தெரியவந்ததும் ஏமாற்று வேலையில் ஈடுபட்டு வந்த அமமுக பெண் நிர்வாகியை கைது செய்யவும் பறிகொடுத்த பணத்தை மீட்டுத்தர கோரியும் மாவட்ட ஆட்சியர், மற்றும் காவல் கண்காணிப்பாளரிடம், புகார் அளித்து இருக்கின்றார்கள்.