Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

திடீரென ஏற்பட்ட மரணம்! கண்ணீரில் சசிகலா மற்றும் டிடிவி தினகரன்!

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகில் பெரும் பகுதியைச் சார்ந்தவர் அண்ணாதுரை இவர் கோட்டூர் தெற்கு ஒன்றிய கழக இருந்து வருகிறார். அதோடு ஒன்றிய குழு தலைவராகவும் இருக்கின்றார் அண்ணாதுரை சசிகலாவின் உறவினர் என சொல்லப்படுகிறது.

இந்த சூழலில் அவருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டது. இதனை அடுத்து தஞ்சாவூரில் இருக்கின்ற ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.ஒருமாத சிகிச்சைக்குப்பின் அவர் நோய்த் தொற்றில் இருந்து மீண்டார். இந்த நிலையில், அவருக்கு அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்பட்டு வந்திருக்கிறது.

இதனைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் கருப்பு பூஞ்சை நோய்க்கான பரிசோதனை செய்து கொண்டார். அதில் அவருக்கு கருப்பு பூஞ்சை நோய் உறுதி செய்யப் பட்டது. இதனையடுத்து சசிகலா ஏற்பாட்டில் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சென்ற ஜூன் மாதம் அவர் அனுமதிக்கப்பட்டார். ஒரு மாதத்திற்கு மேல் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த சூழலில், அண்ணாதுரை சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார். அவருடைய மறைவு சசிகலா மற்றும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் இடையே சோகத்தை ஏற்படுத்தி இருப்பதாக சொல்லப்படுகிறது.

Exit mobile version