Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

திமுகவிற்கு பாய்ந்த அமமுக அணி நிர்வாகிகள் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ!!

திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் சேலம் மத்திய மாவட்ட அமமுக செயலர் எஸ்.இ.வெங்கடாசலம் எக்ஸ் எம்எல்ஏ தலைமையில் 30க்கும் மேற்பட்ட மாவட்டம் மற்றும் ஒன்றிய நகர பகுதி செயலாளர்கள் மற்றும் அணி நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர்.

மேலும் திமுக தலைவர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக அலுவலகத்தில் நேற்று 21.7.2021 காலை மமுமுக கட்சியின் சேலம் மத்திய மாவட்ட செயலாளர் வெங்கடாசலம் தலைமையில் சேலம் மாவட்ட அமமுக கட்சியை சேர்ந்த சூரமங்கலம் தெற்கு பகுதி செயலாளர் ஆர்.சுப்ரமணியம் மற்றும் மேற்கு பகுதி செயலாளர் கிருஷ்ணமூர்த்தி,ஆர்.கே.சரவணன், மாரீஸ் என்கிற மாரியம்மாள்.

வடக்கு ஒன்றிய செயலாளர் எம்.எல்.பி முருகன், எம்ஜிஆர் மற்றும் இளைஞர் அணி மாவட்ட துணை செயலாளர் எஸ்.ஏ.ராஜ்குமார், மாநகர மாவட்ட தலைவர் ஹரிஹரன், ஜி.பிரவின்ராம், பி.பாலாரமேஷ், எஸ்.லோகநாதன் மற்றும் ஓமலூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் ஆர்.கணேசன், கிழக்கு ஒன்றிய இணைச் செயலாளர் வி.கோபாலகிருஷ்ணன், தகவல் தொழில் பணியில் சேர்ந்த ஆர்.சூரியபிரகாஷ்.

ஐடி விங் இணைச்செயலாளர் வி.தினேஷ், பாலாஜி. மாவட்ட துணைச் செயலாளர் டி.ஏ.லட்சுமிகாந்த், விஜயகுமார், அம்மா பேரவை இணைச் செயலாளர் நிஜாம், துணைச் செயலாளர் பி.சுதாகர் என்கிற செல்வராஜ், எம்ஜிஆர் மன்ற தலைவர் எம்.சந்திரன், 46 வது வட்ட செயலாளர் எம்.வபி.சரவணன், 51 வது வட்ட செயலாளர் கார்த்திகேயன்,எம்.வடிவேல் மற்றும் 49 வைத்து வட்ட கோட்டச்செயலாளர் எஸ்.குமார்.

கிழக்கு இளைஞர் அணியைச் சேர்ந்த செந்தில்குமார், துணை செயலாளர் பி.மணிகண்டன், அதிமுகவைச் சேர்ந்த வழக்கறிஞர் பிரிவு முன்னாள் செயலாளர் அருள் புஷ்பராஜ், எம்.ஜி.ஆர்.நற்பணி மன்றம், ஜி.குமார் ஆகியோர் திமுகவில் இணைந்தனர். இவர்கள் அனைவரும் சேலம் மத்திய மாவட்ட அமமுகசெயலாளர் வெங்கடாசலம் எக்ஸ் எம்எல்ஏ தலைமையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

Exit mobile version