பெண்குழந்தைகளை போற்றும் இப்பாடல்கள் மத்தியில் மற்றவை ஈடாகுமா?? தமிழ்சினிமாவில் முக்கிய இடத்தை பெற்ற எவர் கிரீன் சாங்க்ஸ்!!

0
190
Among these songs praising girls, are there any others? Ever Green Shanks which got a major place in Tamil cinema!!

பெண்குழந்தைகளை போற்றும் இப்பாடல்கள் மத்தியில் மற்றவை ஈடாகுமா?? தமிழ்சினிமாவில் முக்கிய இடத்தை பெற்ற எவர் கிரீன் சாங்க்ஸ்!!

ஐநாவில் சர்வதேச பெண் குழந்தைகள் தினமாக அக்டோபர் 11ம் தேதி கொண்டாடப்படும் என அறிவித்தனர். ஆண் பெண் என்ற வேறுபாட்டை உடைத்து குழந்தைகளின் உரிமையை நிலைநாட்டும் வகையில் இந்நாள் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் பெண் குழந்தைகளை போற்றவும், அவர்களை பெருமைப்படுத்தும் வகையில் பல பாடல்கள் வெளிவந்துள்ளது.

அதில் முதலாவதாக கண்ணின் மணியே கண்ணின் மணியே என்ற பாடல் தான். தங்களது அன்றாட வாழ்க்கையில் நடக்கும் துயரங்களை கடந்து வாழ்க்கையில் பெண்கள் முன்னேறுவது குறித்து தான் இப்படம் இருக்கும். இப்படத்தில் காணப்படும் கண்ணின் மணியே கண்ணின் மணியே போராட்டமா என்பது மகளிர்காக பாடப்பட்டது.

அதற்கு அடுத்தபடியாக மகளிர் மட்டும் என்ற படத்தில் வெளிவந்த பாடலும் பெண்கள் குறித்து பாடப்பட்டது. அதேபோல பல பாடல்கள் சினிமா துறையில் பெண்களை மையமாக வைத்து பாடப்பட்டுள்ளது. பெண்கள் முதலில் மகளாகவும், தங்கையாகவும், தாயாகவும், இருப்பதனை நதியே நதியே காதல் நதியே நீயும் பெண்தானா என்ற பாடலில் அழகாக வர்ணித்து இருப்பர். அதேபோல பெண்ணின் தாய்மையை போற்றும் வகையில் ஆராரிராரோ பாடல் அனைவரும் அறிந்ததே.

அதுமட்டுமின்றி பெண்கள் வீடு ,குழந்தைகள், கணவர் என்று இல்லாமல் அவர்களின் லட்சியத்தை அடைய முற்றுகட்டையாக இருக்கும்  இன்னல்களை தவிர்த்து விட்டு முன்னேறுவது குறித்து 36 வயதினிலே என்ற படத்தில் வந்துள்ள வாடி ராசாத்தி என்ற பாடலும் உள்ளது. இதைப்போல ஜோதிகா நடிப்பில் வெளிவந்த மகளிர் மட்டும் இப்படம் முழுவதும் மகளிர் உண்டானது.அவர்களின் கனவு ஆசை பற்றி கூறியது. அதேபோல அப்பாவிற்கும் பெண் குழந்தைக்கும் உள்ள பாசத்தை வெளிப்படுத்தும் வகையில் வா வா என் தேவதையே,ஆனந்த யாழை மற்றும் உனக்கென்ன வேணும் சொல்லு  இப்பாடல்களைத் தவிர்த்து வேறு எந்த பாடலும் இதற்கு மிகையாகாது.