Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சந்து கடையில் பிளாக்கில் சரக்கு விற்கும் 11 வயது சிறுவன்!! இணையத்தில் வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!!

An 11-year-old boy sells goods on the block in an alley shop!! Shocking video going viral on the internet!!

An 11-year-old boy sells goods on the block in an alley shop!! Shocking video going viral on the internet!!

சந்து கடையில் பிளாக்கில் சரக்கு விற்கும் 11 வயது சிறுவன்!! இணையத்தில் வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!!

திமுக ஆட்சி வந்த பிறகு சிறுவர்களிடம்  மது பழக்கம் வந்துவிட்டது. ஆங்காங்கே சிறுவர் மற்றும் சிறுமிகள் பள்ளி சீருடையிலேயே மது அருந்தும் வீடியோக்கல் சமூக வலைத்தளத்தில் பார்க்க முடிகிறது.போதை ஒழிப்பு என்ற விழிப்புணர்வை ஒரு பக்கம் ஏற்படுத்தி வந்தாலும் சிறுவர்கள் மற்றும் சிறுமிகள் மறு பக்கம் மதுவுக்கு  அடிமையாகி வருகின்றனர். அந்த வகையில் 11 வயதே ஆன சிறுவன் பிளாக்கில் சரக்கு விற்கும் வீடியோ தற்பொழுது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கவுண்டப்பனூர் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவன் பிளாக்கில் சரக்கு விற்று வந்துள்ளார். இவரது தாய் அவருடைய சகோதரருடன் அதே கிராமத்தில் வசித்து வருவதாக கூறுகின்றனர். மேலும் இச்சிறுவனின் தந்தை நான்காண்டுகளுக்கு முன்பு இறந்ததாக கூறப்படுகிறது. இவரது தாய் முழு வேலையாக ப்ளாக்கில் சரக்கு விற்பனை தான் செய்து வந்துள்ளார். இவ்வாறு பிளாக்கில் சரக்கு விற்று வருவதால் அவரது தாயை போலீசார் கைது செய்துள்ளனர்.

பின்பு நிபந்தனை ஜாமீன் அடிப்படையில் தற்போது தான் வெளியே வந்துள்ளார். அவ்வாறு வெளியே வந்தவர் தன் மகன் மூலம் பிளாக்கில் சரக்கு விற்றுள்ளார்.இச்சிறுவன் கொரோனா காலகட்டம் முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்ட போதிலும், இவர் முறையாக பள்ளிக்குச் செல்லவில்லை.அதற்கு மாறாக சரக்கு விற்று வந்துள்ளார்.இந்த சிறுவனிடமிருந்து சரக்கு வாங்கிய ஒருவர் இந்த வீடியோவை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து விசாரிக்க சென்ற போது போலீசாருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.ஏனென்றால்,தற்பொழுது இவர்கள் ஆந்திராவில் உள்ள பாட்டி வீட்டிற்கு சென்று உள்ளதாக அக்கம் பக்கத்தினர் தெரிவித்துள்ளனர். இவர்கள் வீடு திரும்பிய பிறகு இவர்களை அழைத்து விசாரிப்பதாக போலீசார் கூறியுள்ளனர்.

Exit mobile version