நிறைமாத கர்ப்பிணி பயத்தினால் செய்த செயல்! பதைபதைத்த குடும்ப உறுப்பினர்கள்!

Photo of author

By Hasini

நிறைமாத கர்ப்பிணி பயத்தினால் செய்த செயல்! பதைபதைத்த குடும்ப உறுப்பினர்கள்!

மாண்டியா மாவட்டம் கே ஆர் பேட்டை தாலுக்கா சாசலு கொப்பலு கிராமத்தைச் சேர்ந்தவர் ஷில்பா. இவருக்கும் ஹாசன் மாவட்டத்தில் சென்னராய தாலுகா சரவணபெலகோலா வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட ஒரு கிராமத்தைச் சேர்ந்த மல்லிகார்ஜுன் என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. சில்பாவிற்கு ஏற்கனவே இரண்டு முறை பெண் குழந்தைகள் பிறந்துள்ளன.

ஆனால் இரண்டு குழந்தைகளுமே சொல்லிவைத்தாற்போல 17 நாட்களுக்குள் உயிரிழந்து விட்டன. இதன் காரணமாக அந்தப்பெண் மிகவும் மனமுடைந்து காணப்பட்டார். இந்த நிலையில் அவர் மீண்டும் மூன்றாவது முறையாக கர்ப்பம் தரித்து இருந்தார். கடந்த சில நாட்களாகவே அவர் மன உளைச்சலில் இருந்துள்ளார். ஏற்கனவே இரண்டு முறை குழந்தைகள் பிறந்து இறந்துவிட்டன.

அதன் காரணமாக தற்போது பிறக்கும் இந்தக் குழந்தையும் இறந்து விடுமோ? என்று மன விரக்தியில் அவர் இருந்து வந்ததாக சொல்கின்றனர். அவரது கணவர் மற்றும் உறவினர்களிடமும் இதுபற்றி அவர் வருத்தப்பட்டுள்ளார். இந்த நிலையில் தற்போது அவர் 8 மாத கர்ப்பிணியாக இருக்கிறார். மேலும் அவருக்கு ஒரு விசித்திர சந்தேகம் ஏற்பட்டுள்ளது. வயிற்றுக்குள்ளேயே ஒருவேளை குழந்தை இறந்து இருக்குமோ? என்று கவலை தோய்ந்து  காணப்பட்டார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டில் தனியாக இருக்கும்போது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டு விட்டார். இந்த நிலையில் நேற்று காலை அவர் தூக்கில் தொங்குவதை பார்த்த கணவர் மற்றும் குடும்பத்தினர் மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர். இது பற்றிய தகவல் அறிந்ததும் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் போலீசார் அந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் இரண்டு குழந்தைகள் பிறந்தவுடன் இறந்ததன் காரணமாக, மூன்றாவது குழந்தையும் பிறக்கும் போதே இறந்து விடுமோ என்ற அச்சத்தில் அவர் தூக்கு போட்டது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை தீவிரப்படுத்தி உள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Exit mobile version