Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஜெயிலுக்கு சென்று வந்த நடிகருக்கு விஜய் தொலைக்காட்சி சீரியலில் நடிக்க வாய்ப்பு

Vijay TV

Vijay TV

ஜெயிலுக்கு சென்று வந்த நடிகருக்கு விஜய் தொலைக்காட்சி சீரியலில் நடிக்க வாய்ப்பு

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் செல்லம்மா சீரியல் நடிகர் ஆர்னவ் மற்றும் செவ்வந்தி சீரியல் நடிகை திவ்யாவும் சமீபத்தில் ரகசிய திருமணம் செய்து இருந்தனர். திவ்யாவிற்கு ஏற்கனவே திருமணம் ஆகி 5 வயதில் மகள் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. திவ்யா தன் மகளின் புகைப்படத்தை பதிவிட்டு தனது குட்டி இளவரசி என்று சமூக வலைத் தளத்தில் பதிவிட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் திவ்யாவை அர்னவ் விரட்டி விரட்டி காதலித்து உள்ளார். அர்னவ் இஸ்லாம் மதத்தை சேர்ந்தவர் என்பதால் திவ்யாவையும் மதம் மாற வற்புறுத்தவே திவ்யாவும் மதம் மாறி உள்ளார்.

இந்த நிலையில் இருவரும் ரகசிய திருமணம் செய்து கடந்த ஒரு ஆண்டு காலமாக வாழ்ந்து வந்த நிலையில் அர்னவ்விற்கு வேறு ஒரு சின்னதிரை நடிகருடன் நெருக்கம் ஏற்ப்பட்டுள்ளது. இந்த நிலையில் திவ்யா நடிகர் அர்னவ்விடம் தன்னை ஊரறிய திருமணம் செய்து கொள்ளுமாறு கூறவே, கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது குறிப்பிடத்தக்கது.

இதனை தொடர்ந்து இவர் கர்ப்பமாகி உள்ளார். இந்த நிலையில் அர்னவ் இவரை பிரிந்து சென்று உள்ளார். கர்ப்பிணி பெண்ணான திவ்யா தனியாகவே வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் அர்னவ் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதை அறிந்த திவ்யா, போலீசில் அர்னவ் தன்னை ஏமாற்றி விட்டதாக புகார் அளித்து இருந்தார்.

இதன் காரணமாக அர்னவ் கைது செய்யப்பட்டார். இந்தநிலையில் தற்போது இவருக்கு ஜாமீன் கொடுக்கப்பட்டுள்ளது. இவர் மீண்டும் சீரியலில் நடிக்க தொடங்கியுள்ளார். இந்த செய்தி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Exit mobile version