Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

எண்ணற்ற நோய்களை தீர்க்கும் காலை வேளையில் குடிக்க ஓர் அற்புத பானம்!

எண்ணற்ற நோய்களை தீர்க்கும் காலை வேலையில் குடிக்க ஓர் அற்புத பானம்!

தேவையான பொருட்கள்: 

காரட் – 1,

பீட்ரூட்-1,

ஆப்பிள் – 1,

தோல் நீக்கிய இஞ்சித்துண்டு -1.

செய்முறை:

தோல் நீக்கிய இஞ்சித்துண்டு,மற்றும் காரட், பீட்ரூட், ஆப்பிள் ஆகியவற்றை நன்றாகக் கழுவி, தோலோடு துண்டுகளாக நறுக்கி , ஜூஸரில் இட்டு சாறு பிழிந்து அருந்தவும்.

நன்மைகள்:

புற்று நோய் செல்கள் வளருவதைத் தடுக்கிறது. கல்லீரல், கணையம், சிறு நீரகங்கள் தொடர்பான வியாதிகள் வருவதைத் தடுக்கிறது. வயிற்றுப் புண்ணை குணமாக்குகிறது. நுரையீரலைப் பலப்படுத்துகிறது

இதயத் தாக்குதல் மற்றும் உயர் ரத்த அழுத்தம் வருவதைத் தடுக்கிறது.நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக்குகிறது

பார்வைத் திறனை அதிகரிக்கிறது. களைப்படைந்த கண்களுக்கும் , உலர் கண்களுக்கும் நன்மை பயக்கிறது.

தசை வலி மற்றும் உடல் வலிக்கு நிவாரணம் தருகிறது. உடலில் சேரும் நச்சுத் தன்மையை முறிக்கிறது. மலச்சிக்கலை எவ்வித சிக்கலுமின்றி குணப்படுத்துகிறது. சருமத்திற்கு பளபளப்பினைக் கூட்டுகிறது.

அஜீரணம், தொண்டைப் புண் ஆகியவற்றால் ஏற்படும் சுவாச துர்நாற்றத்தை நிவர்த்தி செய்கிறது

பெண்களுக்கான மாத விடாய் வலியினைக் குணமாக்குகிறது. பக்க விளைவுகள் ஏதுமில்லை

எடைக் குறைப்பிற்கு உதவுகிறது. இரண்டு வார கால உபயோகத்திலேயே நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது

பயன்படுத்தும் முறை:

காலையில் வெறும் வயிறில் அருந்தவும்.

சாறு பிழிந்த உடனேயே அருந்துவது மிகுந்த நன்மை தரும். அருந்திய பின் ஒரு மணி நேரம் கழித்து காலை உணவு உண்ணலாம். அதிகப் பலன் பெற காலை ஒரு முறை, மாலை 5 மணிக்கு முன்பு ஒரு முறை என இரண்டு வேளைகள் அருந்தலாம்

குறைந்த செலவில் நிறைந்த பலன் களை வாரி வழங்கும் இந்த பானத்தை நீங்கள் பயன்படுத்துங்கள். அளவு மிகுந்த நன்மைகளைப் பெறுங்கள்.

Exit mobile version