இரண்டு கைகள் இல்லாமல் காரை ஓட்டி அசத்தும் சாதனை பெண்..!!

0
174
An amazing woman who drives a car without two hands..!

இரண்டு கைகள் இல்லாமல் காரை ஓட்டி அசத்தும் சாதனை பெண்..!!

மனதில் தன்னம்பிக்கையும் தைரியமும் இருந்தால் யார் வேண்டுமானாலும் சாதிக்கலாம் என்பதற்கு உதாரணமாக இந்த உலகில் பலர் உள்ளனர். உடல் அளவில் குறை இருந்தாலும் மனதளவில் தைரியமாக போராடி வெற்றி பெற்ற சாதனை மனிதர்களில் ஒருவரை பற்றி தான் தற்போது இந்த பதிவில் பார்க்க போகிறோம்.

அவர் வேறு யாருமல்ல பிறக்கும்போத குறைபாடு காரணமாக கைகள் இல்லாமல் பிறந்த கேரளாவை சேர்ந்த ஜிலுமோல் மேரியட் தாமஸ் தான். பிறவியிலேயே இரண்டு கைகள் இல்லாத நிலையிலும், ஜிலுமோல் தனது தன்னம்பிக்கை மற்றும் விடாமுயற்சி காரணமாக கால்களால் கார் ஓட்ட கற்று கொண்டு ஓட்டுநர் உரிமமும் வாங்கியுள்ளார். அவர் எப்படி இதை சாதித்தார் என்று விரிவாக பார்க்கலாம்.
1991 ஆம் ஆண்டு கேரளாவில் பிறந்தவர் தான் ஜிலுமோல் மேரியட் தாமஸ். இவர் தனது குறையை சாதனையாக மாற்ற கடுமையாக போராடியுள்ளார். ஒவ்வொரு முறையும் ஜிலுமோல் ஓட்டுநர் உரிமம் கோரி விண்ணப்பிக்கும் போது இவரின் குறைபாடை காரணமாக காட்டி சாலை போக்குவரத்து அதிகாரிகள் இவர் மனுவை நிராகரித்து வந்தனர். அதன் பின்னர் ஜிலுமோல் இதை எதிர்த்து கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அதன் பின்னர் இவர் ஓட்டுவதற்கு வசதியாக இவரை போல் உடல் குறைபாடு கொண்டவர்களுக்கான மாநில ஆணையம் மற்றும் கொச்சியில் உள்ள தனியார் நிறுவனத்தின் உதவியோடு காரின் அமைப்பை மாற்றி அமைத்தனர். அதனை தொடர்ந்து மிகவும் சிரமமான ஓட்டுநர் சோதனையிலும் ஜிலுமோல் தேர்ச்சி பெற்று கடந்த 2023 ஆம் ஆண்டு அவரின் கனவான ஓட்டுநர் உரிமத்தை பெற்றார்.
இதன் மூலம் இரு கைகள் இல்லாமல் ஓட்டுநர் உரிமம் பெற்ற இந்தியாவின் முதல் பெண் என்ற சிறப்பை ஜிலுமோல் பெற்றுள்ளார். அதைவிட இதில் சிறப்பு என்னவென்றால் ஜிலுமோல் அவரின் ஓட்டுநர் உரிமத்தை கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் கையால் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. தனது உடல் குறைபாட்டை ஒரு குறையாகவே கருதாத ஜிலுமோல் மேரியட் தாமஸ் அவரின் கனவை நோக்கி மட்டுமே பயணித்தார். அதனால் தான் அவரால் வெற்றி பெற முடிந்தது. இன்று அவரை போன்ற பலருக்கு ஜிலுமோல் ஒரு முன்னுதாரணமாக திகழ்ந்து வருகிறார்.