மாணவர்களின் ஊட்டச்சத்திற்கு உத்திரவாதம்! வருகிறது உலர் உணவு திட்டம்!

0
104
Midday Food

சீனாவிலிருந்து உலகம் முழுவதும் கொரோனா பரவிக்கொண்டிருந்த ஆரம்ப கட்டத்திலேயே தமிழக அரசு பள்ளி கல்லூரி நிறுவனங்களுக்கு கடந்த மார்ச் மாதம் 16ஆம் தேதி முதல் விடுமுறை அளிக்கப்பட்டது.பன்னிரெண்டாம் வகுப்பிற்கு மட்டும் இறுதிப் பொதுத்தேர்வு எழுத பட்ட நிலையில் பத்தாம் வகுப்பு மற்றும் பதினொன்றாம் வகுப்பிற்கு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.

இதனிடையில் கொரோனா பரவல் அதிகமாக உள்ளதால் கடந்த சில மாதங்களாக ஊரடங்கு இருந்து வந்த நிலையில் தற்பொழுது ஆறாம் கட்ட பொது முடக்கம் சிலபல தளர்வுகளுடன் நடைமுறையிலுள்ளது.நாடு முழுவதும் கொரோனா பரவலால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் டிசம்பர் மாதம் வரை பள்ளிகள் திறக்கப்படாது என மத்திய அரசால் சொல்லப்பட்டது.

இதனால் மாணவர்கள் அனைவரும் ஊட்டச்சத்துள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்னும் எண்ணத்தில் “உலர் உணர்வு திட்டத்தை” தமிழக அரசு கொண்டுவந்துள்ளது. எனவே பள்ளிகள் திறக்கப்படும் வரை மாணவர்கள் சத்துணவு திட்டத்தின் கீழ் அரிசி,பருப்பு உள்ளிட்ட உலர் உணவுகளை பெற்றுக்கொள்ளலாம்.