சேலம் மாவட்டத்தில் பள்ளி மாணவர்களை ஏற்றி சென்ற ஆட்டோ திடீரென கவிழ்ந்தது! காரணம் என்ன போலீசார் விசாரணை!

0
220
An auto carrying school students suddenly overturned in Salem district! The reason why the police investigation!

சேலம் மாவட்டத்தில் பள்ளி மாணவர்களை ஏற்றி சென்ற ஆட்டோ திடீரென கவிழ்ந்தது! காரணம் என்ன போலீசார் விசாரணை!

சேலம் மாவட்டம் கோட்டை பகுதியில் பள்ளி மாணவர் மாணவிகளை ஏற்றுக்கொண்டு ஒரு ஆட்டோ வானது 4ரோடு நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்சரா இறக்கம் அருகில் ஆட்டோ வந்து கொண்டிருந்தது அதே பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று விபத்துக்குள்ளாகி சாலையில் கிடந்தது அதனை கண்ட ஆட்டோ டிரைவர் திடீரென்டர் பிரேக் அடித்தார் அப்போது ஆட்டோ நிலை தடுமாறி  கிழே  கவிழ்ந்ததே.

மேலும் இதில் பள்ளி மாணவர்கள் ஏழு பேர் படுகாயம் அடைந்தனர். மேலும் ஆட்டோ டிரைவருக்கு லேசாக காயம் ஏற்பட்டது.ஆட்டோவின்  கண்ணாடிகள் முழுவதும் உடைந்து சேதம்மானது. அக்கம்பக்கத்தினர்  மாணவர்களையும் ஆட்டோ டிரைவரையும் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

மேலும் இது குறித்து செவ்வாய்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மாணவர்களின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் மாணவர்களை சிகிச்சையிலிருந்து அவர்களின் பெற்றோர்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்றனர் இந்த விபத்தில் அந்த பகுதியில்  சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.